WhatsApp : +91 99 434 765 87
அக்குபஞ்சர் நண்பகல் நள்ளிரவு விதி
அக்குபஞ்சர் நண்பகல் நள்ளிரவு விதி என்பது ஆர்கன் கிளார்க் தியாரியிலிருந்து வெளி வந்த ஒரு தியரி ஆகும்.

ஆர்கன் கிளார்க் தியாரியின் படி ஒவ்வொரு  உறுப்பிற்க்கும் ஒரு நேரத்தில் பலம் அதிகம் என்றும் ஒரு நேரத்தில் பலம் குறைகின்றது என்பதை சீனர்கள் கண்டுபிடித்தார்கள். 
அப்படி கண்டுபிடித்த ஆர்கன் கிளார்க் தியாரியல் இரவில் வைத்தியம் பார்ப்பதற்க்கு முடியாத நேரத்தில், இரவில் வேலை செய்யும் உறுப்பிற்க்கு பகலில் வைத்தியம் பார்ப்பதற்க்காக பயன்படுத்தும் ஒரு வைத்திய முறையே நண்பகல் நள்ளிரவி விதியாகும்.

இந்த நண்பகல் நள்ளிரவு விதி பல அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கும், அக்குபஞ்சர் வைத்தியம் பார்க்கின்ற மக்களுக்கும் வெகு உபயோகமான ஒன்று ஆகும்.

உதாரணத்திற்கு கீழே அனைத்து நள்ளிரவு உறுப்புக்களுக்கு பகலில் வைத்தியம் பார்க்கும் முறையை விளக்கியுள்ளேன்.

  • இரவில் 9 மணியிலிருந்து 11 மணிவரை உள்ள மூவெப்பக்குழியில் வைத்தியம் செய்ய முடியாத நேரத்தில் பகலில் 9 மணியிலிருந்து 11 வரை உள்ள மண்ணீரலில் வைத்தியம் செய்யலாம்.

  • இரவில்  11 மணியிலிருந்து 1 மணிவரை உள்ள பித்தப்பையில் வைத்தியம் செய்ய முடியாத நேரத்தில் பகலில் 11 மணியிலிருந்து 1 மணிவரை உள்ள இதயத்தில் வைத்தியம் செய்யலாம்.

  • இரவில் 1 மணியிலிருந்து 3 மணிவரை உள்ள கல்லீரலில் வைத்தியம் செய்ய முடியாத நேரத்தில் பகலில் 1 மணியிலிருந்து 3 மணிவரை உள்ள சிறுகுடலில் வைத்தியம் செய்யலாம்.

  • இரவில் 3 மணியிலிருந்து 5 மணிவரை உள்ள நுரையீரல் நேரத்தில் வைத்தியம் செய்ய முடியாத நேரத்தில் பகலில் 3 மணியிலிருந்து 5 மணிவரை உள்ள சிறுநீரகப் பையின் நேரத்தில் வைத்தியம் செய்யலாம்.

    இவ்வாறு இரவில் வைத்தியம் செய்ய வேண்டிய உறுப்புக்களுக்கு பகலில் வைத்தியம் பார்ப்பதே நள்ளிரவு நண்பகல் தியாரி ஆகும்.