WhatsApp : +91 99 434 765 87
அக்குபஞ்சர் புள்ளி TW2
உங்கள் தொண்டையில் ஏற்படக்கூடிய நமைச்சல் மற்றும் குருகுருப்பு மற்றும் இருமல் போன்றவைகளை அக்குபஞ்சரில் உள்ள ஒரு புள்ளியை அழுத்துவதன் மூலம் சரி செய்யலாம். 

அந்த புள்ளி TW2 ஆகும்.  திரிபில் வார்மர் என்பது நம் உடம்பில் உள்ள 3 வெப்பக் குழிகள் ஆகும். இது ஒரு உருவம் இல்லாத அமைப்பு ஆகும். நம் உடம்பில் உள்ள கழுத்து குழி(Neck Hole) மற்றும் நெஞ்சுக்குழி(Upper Middle Body) மற்றும் கீழ் வயிற்றுக் குழி(Abdomen Body) போன்றவைகளே மூவெப்பக் குழிகள் ஆகும்.

இந்தப் பாதையில் ஏற்படும் அசௌகரியங்களினால் உருவாகும் உடல் உபாதைகள் இந்து திரிபில் வார்மர் புள்ளிகளில் அழுத்தம் அல்லது ஊசி போடுவது அல்லது தொடுவதான் மூலம் சரியாகும்.

அப்படி சரியாகக் கூடிய ஒரு விசயம் தான் இருமல் என்பது மற்றும் தொண்டையில் ஏற்படும் பல பிரச்சனைகளை முதல் உதவி போலும் சில நேரங்களில் முழுவதுமாக நீக்கக் கூடிய தன்மை உடைய ஒரு புள்ளி தான் TW2 ஆகும்.



TW2 என்ற இந்த புள்ளி மோதிர விரலின் முடிவில் உள்ளது. படத்தில் உள்ளது போல் TW1 க்கும் TW3க்கும் இடையில் மோதிர விரலின் ஓரத்தில் TW2 இருக்கின்றது.

Video Url : https://youtu.be/HbDObpvniOk