அக்குபஞ்சர் யின் மற்றும் யாங் தத்துவம் என்பது மனித உடலில் உள்ள 12 உறுப்புக்களை இரண்டு பாகமாக பிரித்து அதை யின் மற்றும் யாங் உறுப்புக்காளாக கூறி அதற்கு ஏற்றார் போல் வைத்தியம் பார்க்கப்படுகின்றது.
யின் என்பது கெட்டியான உறுப்புக்களை குறிப்பது ஆகும். யாங் என்பது குழிவான உறுப்புக்களை குறிப்பது ஆகும். யின் உறுப்பு என்பது சக்தி என்றும் யாங் உறுப்பு என்பது சிவன் என்றும் கூறப்படும். மேலும் யின் என்றால் கருமையாகவும் யாங் என்பது வெண்மையாகவும் இருந்து செயல்படும்.
யின் உறுப்புக்கள் மற்றும் குணங்கள் :
1. நுரையீரல்,
2. இதயம்,
3. இருதயஉறை,
4. மண்ணீரல்,
5. சீறுநீரகம்,
6. கல்லீரல்
இந்த ஆறு உறுப்புகளும் யின் உறுப்புக்கள் ஆகும்.
யின் உறுப்பின் தன்மை
- கருப்பு,
- பெண் தன்மை,
- சக்தி,
- குளிர்ச்சியான நோய்கள்,
- அதிக அழுத்தம் கொடுத்தால் வலி போகும்,
- நாக்கில் வெளிர் நிறத்தில் தென்படுவது,
- கருப்பையில் இரத்தம் தேக்கம் ஏற்படுதல்,
- பாதம் மற்றும் அடிவயிற்றைக் குறிப்பிடுவது,
- ரொம்ப ஆழமாக இருக்கும் உறுப்பு,
- இதன் துடிப்பு (பல்ஸ்) பார்க்கும் பொழுது மெதுவாகத் தெரியும்,
- யின் உறுப்புக்கள் சக்தியை தேக்கி வைத்து, ஒன்றையொன்று சார்ந்து வாழக்கூடியது,
- (லுஸ் மோசன்) வயிற்றுப் போக்கு ஏற்படும்.
- மூச்சு விட சிரமாமான சூழ்நிலையில் இருக்கும்.
- நெகடிவ் தன்மை கொண்டது
- கெட்டியான உறுப்புக்கள் ஆகம்
இவைகளில் சத்து குறைபாடு ஏற்பட்டால் மிகக் கடுமையாக இருக்கும்.
யாங் உறுப்புக்கள் மற்றும் குணங்கள்:
1. பெருங்குடல்,
2. சிறுகுடல்,
3. மூவெப்பக்குழி,
4. வயிறு,
5. சீறுநீரகப்பை,
6. பித்தப்பை
இந்த ஆறு உறுப்புகளும் யாங் உறுப்புக்கள் ஆகும்.
- யாங் உறுப்பின் தன்மை வெண்மையாகும்.
- இது ஆண் தன்மை கொண்டது.
- சிவன்.
- நெருப்பினால் ஆன நோய்கள் வரும்.
- அதிக அழுத்தம் கொடுத்தால் வலி ஏற்படும்.
- நாக்கில் வெளிர் மஞ்சள் நிறத்தில் பிசின் போன்று இருக்கும்.
- பெண்களுக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்படும்.
- மலசிக்கல் ஏற்படும்.
- வயிறு மந்தம் ஏற்படும்.
- இதன் துடிப்பு(பால்ஸ்) பார்க்கும் பொழுது மிக வேகமாக மற்றும் மேலோட்டமாக இருக்கும்.
- யாங் உறுப்புக்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழாது ஆனால் ஒன்றையொன்று கட்டுப்படுத்தக் கூடியது.
- கழிவுகளை அதிகமாக வெளியேற்றும் ஒரு உறுப்பு ஆகும். அதிக வேகமாக மூச்சு விடும் நிலையை உருவாக்கும். யாங் உறுப்புக்கள் யின் உறுப்புக்களில் ஏற்படும் குறைபாடுகளை முதலில் இந்த உறுப்புக்கள் மூலமாகத்தான் வெளிப்படுத்தும்.
- தலை மற்றும் பின்புறத்தை உடம்பில் குறிப்பிடக் கூடியது ஆகும்.
- இது வெளிப்புற உறுப்புக்களாக இருக்கும்.
- பாசிடிவ் தன்மை கொண்டது.
- இது குழிவான உறுப்பு அல்லது உருளையானது அல்லது ஓட்டை உடைய உறுப்புக்கள் ஆகும். இந்த உறுப்புக்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழது.ஆனால் கட்டுப்படுத்தும்
இந்த யின் மற்றும் யாங் உறுப்புக்கள் உடலை சமப்படுத்த உதவுகின்றது. இவை இரண்டிலும் கூடினாலும் குறைந்தாலும் நோய் ஆகும்.