WhatsApp : +91 99 434 765 87
பெரியரின் மதிப்பிற்குரிய அன்பர்களே
பெரியரின் மதிப்பிற்குரிய அன்பர்களே உங்களைப் போன்றவர்களைக் கண்டு வியக்கின்றேன். பெரியார் ஏதோ ஆராய்ச்சி செய்தார் அவரின் அறிவுக்கு எட்டிய வகையில் அவரின் கருத்தைத் தெரிவித்தார்.

ஆனால் பெரியாரை பின்பற்றுவோர் யாரும் எதையும் ஆராயாமல், அவர் சொன்னதை அப்படியே வேதவாக்காக கொண்டு செயல்பட ஒரு மணம் வேண்டும்.

அதற்க்காக உங்களை வணங்குகிறேன். அடுத்த பிறவியிலாவது நீங்கள் ஆராய்ந்து பார்க்கும் மனிதனாக மாற இந்து பிரபஞ்சத்தை வணங்குகின்றேன். இந்த பிறவியில் உங்கள் பயணம் வீணாவதை நினைத்து வருந்துகின்றேன்.

என்னை கேவலமாக பேசுவதை விடுத்து உங்களுக்குள் கொஞ்சம் விழித்து இந்த பிரபஞ்சத்தை நீங்கள் கொஞ்சம் தெளிவாக பார்க்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன்.


பெரியாரின் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், கீழே உள்ளவைகளை ஆராய்ச்சி செய்யுங்கள் :
1. கோவில்கள் வெறும் கல் என்று மட்டும் முடிவு செய்யாமல் அது படைக்கப்பட்டதன் உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.
  உதாரணத்திற்கு : கோவில்கள் மக்கள் மழை மற்றும் வெள்ளம் வரும் காலத்தில் தங்குவதற்க்காக உருவாக்கப்பட்டது. கோவில்கள் போர்காலத்தில் மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு மிகப்பெரிய கோட்டை சுவர் வைத்து கட்டப்பட்டது. இப்படி பல காரணங்கள் இருக்கின்றது. அதையும் தாண்டி அங்கு பல அற்புதங்களை சிலைகளின் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்கள். அவைகளை ஆராய்ந்து தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.

2. ஜாதிகள் உருவானது எப்படி? அதற்கு ஜாதிப் பெயர்கள் உருவான விதம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்?

3. மதங்கள் உருவானது எப்படி? மதங்களின் பகுதிகள் மூன்றாக மட்டும் அதிகம் இருப்பது ஏன்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்?

4. எல்லா மதங்களிலும் சொல்லியுள்ள பொருள்களை கொஞ்சம் ஆலோசனை செய்து பாருங்கள்?

5. பிரமாணன், செட்டியன், சக்லியன், கவுண்டன், முதலியன், பறையன், அய்யன், பிள்ளையன், நாக்கன், தேவன் இப்படி தன்னை ஜாதிகளில் கூறிக் கொள்பவன் யார் என்று பாருங்கள்?

6. மாநிலத்தை பிரித்துப் பார்ப்பவன் யார் என்று பாருங்கள்?

இப்படி பல விசயங்களை ஆராய்ந்து கூற வேண்டியுள்ளது. இவைகளை தெரிந்த ஒருவர் உள்ளார். அவர் மிக மோசமானவர் மற்றவர்கள் மனதிற்கு பிடிக்கமாட்டார். அவரின் பேச்சு நளிணமாக இருக்காது. அசிங்கமாக அதிகம் பேசுவார். அவரை தைரியம் உள்ள பெரியார் பக்தர்கள் சந்தித்து அவர் கொடுக்கும் பயிற்ச்சியை தைரியம் இருந்தால் செய்து பிறகு உங்கள் கொள்கைகளைக் கூறுங்கள்.

அவரின் வளைத்தளம் கீழே கொடுத்துள்ளேன்.
https://www.youtube.com/user/MrSivayogi
https://www.facebook.com/sivayogi
https://www.facebook.com/search/str/Sivayogi%2BSivakumar/keywords_top
http://yogakudil.webs.com/
https://plus.google.com/+sivayogisivakumar

அதனில் சென்று அவரை தொடர்பு கொள்ளுங்கள். அல்லது தாங்களே ஆராய்ச்சி செய்யுங்கள். உங்களைப் போன்ற வீரியம் உள்ளவர்கள் உண்மைதனை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். எனக்கு உண்மை தெரியும் அதை உணர முயன்று கொண்டு இருப்பவன். நான் கூறும் குருநாதர் அதை உணர்ந்தவர் அவரை சந்தியுங்கள் அல்லது நீங்களே ஆராய்ச்சி செய்யுங்கள்.


நன்றி இந்தப் பதிவைப் படித்தமைக்கு.