கடவுள் என்றால் என்ன?
கட+உள் என்பதே கடவுள் என்று ஆனாது. உனக்குள் கடந்து சென்று பார் என்பதே கடவுள் ஆனாது. அப்படி உனக்குள் என்ன இருக்கிறது. உனக்குள் அனைத்தும் இருக்கின்றது. அங்கு என்ன இல்லை. ஒடுகின்ற நீரும், நிற்கினற மலைக்குன்றுகளும் வளைந்து நெழிந்த அருவியும், பார்கின்ற பார்க்காத பிரபஞ்சங்கள் அனைத்தும் உள்ளேயே இருக்கின்றது.
கடவுள்களின் ஏன் இத்தனை வகைகள்?
இந்துக்கள் என்று சொல்லக்கூடிய சிந்து சமவெளி மக்கள் வணங்கும் கடவுள்களைப்பார்த்தால் ஆச்சர்யம், வெறுப்பு, கோபம் என்று இரண்டு மதத்தவர்களுக்கு(இஸ்லாம், கிறிஸ்துவம்) வருகின்றது. (இஸ்லாம், கிறிஸ்துவம்) இந்த இரண்டு மதங்களும் வணங்குவதை இந்துக்கள் வெறுக்கின்றார்கள். இதேபோல் கிறிஸ்துவம் மற்ற இரண்டு மதங்களையும் வெறுக்கின்றது. இஸ்லாமும் மற்ற இரண்டு மதங்களையும் வெறுக்கின்றது.
இப்படி சண்டை போடுகின்றவர்கள் மத்தியில் வாழ்ந்த ஞானிகள் மற்றும் சித்தர்கள் மற்றும் உலக அனுபவஸ்த்தர்கள் யாராவது யாரையாவது வெறுத்துப் பார்த்துள்ளீர்களா? அல்லது அவர்கள் சண்டை போட்டு தான் பார்த்துள்ளீர்களா? ஏன் உங்களிடம் இவைகள் எல்லாம் எண்ண என்ற கேள்வி எழவில்லை?
இந்துக்கள் வணங்கும் தெய்வங்கள் :
1. அம்பாள், பார்வதி, முண்டக்கண்ணியம்மன், வேப்பில்லைக்காரி, வாராஹி, ப்ரத்யங்கிரா தேவி, இலட்சுமி, சரஸ்வதி, மீனாட்ச்சி, காமாட்ச்சி, காளிகாம்பாள், காளி, எல்லையம்மன், அங்காளபரமேஸ்வரி, அங்காளம்மன், அகிலாண்டேஸ்வரி, ஆண்டாள், சக்தி, ஓம் சக்தி, அங்கையர்கண்ணி, சாமுண்டி, சண்டி, சண்டிகேஸ்வரி, மாரியம்மன், பேச்சியம்மன், வெட்காளியம்மன், கோணியம்மன், மாசணியம்மன், நாகம்மண், நாகாத்தாள், ஈஸ்வரி, சப்தகன்னிகள்(பிராமி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி, மகேஸ்வரி), பாதளா பைரவி, சீதை, இன்னும் பல தெய்வங்களை பெண் தெய்வங்களாக வணங்குகின்றார்கள்.
2. சிவன், பெருமாள், விஷ்ணு, கருப்பண்ணசாமி, கருப்பராயன், பிரம்மா, சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, கேது , சனி, குரு, சுக்கிரன், உலகளந்த பெருமாள், சயனப் பெருமாள், சண்டிகேஸ்வரர், விநாயகர், முருகன், எமதர்மராஜா, பாதாளபைரவர், காலபைரவர், தட்ஸிணாமூர்த்தி, ஏகாம்பரேஸ்வர் ஆஞ்சநேயர், ராமர், பரசுராமர், பலராமர், கிருஷ்ணன், கோவிந்தன் இதுபோன்று இன்னும் பல ஆண் தெய்வங்களை வணங்குகின்றனர்.
இவர்களைப் பார்த்து ஏன் மற்றவர்கள் கோபப்படுகின்றார்கள். இவர்கள் யார் என்று தெரிந்தால் அவற்றை வணங்கலாமா? அல்லது விட்டு விட்டுப் போகலாமா? என்று முடிவு செய்யலாம்.
முஸ்லீம் வணங்குவது : அல்லா மற்றும் அல்லா சார்ந்த கொள்கைகள்
கிறிஸ்துவர்கள் வணங்குவது : ஏசு மற்றும் ஏசு சார்ந்த விசயங்கள்
ஆனால் இங்கு அதிகமாக ஞானியாக வாழ்ந்தவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்றால் பல உருவங்களை வணங்கியோ அதை உருவாக்கியோ அதற்கு பூ போட்டோ அல்லது அதை புரிந்து கொண்டோ வாழ்ந்தவர்கள் மட்டுமே. ஏன் இந்த மாற்றம் மற்ற மதத்தை விட இந்துக்களில் மட்டும் இத்தனை சாமியார்கள் மற்றும் தியாணப்பயிற்ச்சிகள் ஏன் மற்ற மதத்தில் யோகசானம் என்ற ஒன்றைக் காணோமே மற்றும் தியானம் என்ற ஒன்றும் வெளிப்படவில்லையே எங்கே போனது அவைகள் மற்றவர்கள் மத்தியில் நான் இந்து மதத்தை பறைசாற்ற வரவில்லை. உருவ வழிபாட்டை ஆமோதிக்க வரவில்லை. மற்ற மதங்களை குறை என்று கூறவோ அவர்கள் வழிபாடு தவறானது என்று கூறவோ வரவில்லை.
எனக்கு இஸ்லாமின் வழிபாடு அவர்கள் ஒரு நாளைக்கு 5 வேளை தொழுகை புரிவது மிகவும் பிடிக்கும். ஆனால் அவர்கள் உண்மை தெரியாமலே செல்லுகின்றார்களே என்று தான் மனம் வருத்தம் அடையும்.
அதே போல் கிறிஸ்துவர்களின் வாரத்தில் ஒரு நாள் கூட்டுப் பிரார்த்தனை என்ற கொள்கை மிகவும் பிடிக்கும். ஆனால் இவர்களும் உண்மை தெரியாமலே வாழ்வது தான் மனது வருத்தம் தெரிவிக்கும்.
இவர்களைப் பார்த்து ஏன் மற்றவர்கள் கோபப்படுகின்றார்கள். இவர்கள் யார் என்று தெரிந்தால் அவற்றை வணங்கலாமா? அல்லது விட்டு விட்டுப் போகலாமா? என்று முடிவு செய்யலாம்.
மதம் மறந்த மனிதன் மதம் பிறப்பதற்க்கு முன்பு பிறந்த மனிதன் முதலில் வானத்தில் பெய்யும் மழையைப் பார்த்து வணங்கினான். பிறகு வானத்தையும் வணங்கினான்.
தன்னை பாதுகாக்கும் மலையும் அதன் கல்லையும் வணங்கினான்.
தனக்கு உணவு அழிக்கும் நிலத்தையும் அதில் விளையும் பயிர்களையும் வணங்கினான்.
தன் உயிரை எடுக்கும் பாம்பை வணங்கினான்.
இப்படி தான் பார்த்த அனுபவித்த விசயங்களில் உள்ள பொருட்களை எல்லாம் அவன் வணங்கிச்சென்றான்.
பிறகு ஒரு நாள் அவனுக்குள் தோன்றிய மாற்றங்களினால் தனக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பை உணர்ந்து அதற்கு உருவம் கொடுத்து வணங்கினான். இந்த நிஜத்தை உணர்ந்த பின் பல உருவங்களை வைத்து அனைத்து உருவாங்களிலும் ஒரே பொருளை வைத்து வணங்கியவன் இந்து.
இந்த விசயங்களை விளக்க அந்தக் காலத்தில் இரண்டு நபர்கள் முயன்றார்கள் ஒருவர் ஏசு மற்றொருவர் நபிகள் நாயகம். அவர்கள் உணர்த்தியதை தாங்கள் யாரும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் இருவரும் போராடி ஒருவர் தன் உயிரையும் அரசாங்கம் எடுத்த போதும் மக்களுக்கு உண்மையை உணர்த்தி விட்டு போனார் என்பது ஒரு கதையாக தெரியும்.
அதே போல நபிகள் நாயகம் எல்லாமே இறைவனின் கருணையால் ஒன்று என்று தனக்கு தெரிந்த பாசையில் அல்லா என்று பிரபஞ்ச சக்தியை காண்பித்து வணங்கினார். ஆனால் அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை புரிந்து கொள்ளவில்லையா? அல்லது இடையில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டு விட்டதா என்று தெரியாமல் நான் தவிக்கின்றது போல் எத்தனை பேர் தவிக்கின்றார்கள் என்று தெரியவில்லை.
நான் எதிர்பார்ப்பது உங்களுக்குள் கேள்விகள் வரவேண்டும்.
நான் சமீபத்திய காலத்தில் ஒரு குருவின் மூலம் இறைவனை அடையும் பாலத்தைப் பற்றி தெரிந்து கொண்டேன். அதன்பிறகு இப்படி மும்மதத்திற்க்கும் எனக்கு ஒரளவுக்கு விளக்கமும் இந்த உலகத்தில் உள்ள அனைத்து விக்கிரகங்களுக்கும் உள்ள பொருளும் புரியத் தொடங்கியது.
என்னுடைய கேள்விகள் :
1. இந்து
2. கிறிஸ்துவம்
3. இஸ்லாம் இவைகளில் எந்த மதம் உயர்ந்தது?
1. சிவன், பார்வதி
2. முருகன் வள்ளி, தெய்வாணை
3. விநாயகர் (சில இடங்களில் மட்டும் சித்தி புத்தி என்ற இரண்டு மனைவிகளுடன் விநாயகர் இருப்பது)
4. பெருமாள் லெட்சுமி
5. பிரம்மா சரஸ்வதி
6. பிற அனைத்து தெய்வங்கள்
7. யேசு
8 அல்லா
போன்றவர்கள் எல்லாம் யார் யார் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. ஆகவே நான் தேடிக் கொண்டே இருந்தேன்.
அந்த வழிகாட்டுதலை சுமந்து தினமும் அவர் கொடுத்த தியானத்தை செய்தால் ஒவ்வொன்றாக புரிய ஆரம்பித்தது.
இப்படி மதம் தாண்டி உங்களையும் சிந்திக்கச் சொல்கின்றேன்.
உதாரணத்திற்கு :
ஆஞ்சநேயர் என்றால் ஆங்ஞான சக்கரம் ஆகும்.
விநாயகர் என்றால் மூலதாரச் சக்கரம் ஆகும்.
சூலம் என்றால் மூன்றாவது கண் என்றும் அர்த்தம் ஆகும்.
அல்லா என்றால் எல்லாமே என்று அர்த்தம். ஏசு கூறியதை விடுத்து அவரை சிலையாக வைத்து வணங்குகின்றார்கள். ஆனால் அதுவும் பல உண்மைப் பொருள்களை விழக்கிக் கொண்டு தான் இருக்கின்றது.
கோவில்களில் வைத்துள்ள கோபுரங்களில் உள்ள கலசங்கள் :
5 கலசங்கள் : பஞ்ச பூதங்கள்
7 கலசங்கள் : சப்த கன்னிகள் மற்றும் 7 சக்கிரகங்கள்
3 கலசங்கள் : மூன்றாவது கண்ணையும் சேர்த்து மூன்று கண்கள்
4 கலசங்கள் : நான்கு திசைகள்
9 கலசங்கள் : நவகிரகங்கள் மற்றும் உடம்பில் 9 விதமான முக்கிய இயக்கங்கள்
12 கலசங்கள் : 12 ராசிகள்
என்று இப்படி பல பொருட்களை உருவாக்குவதற்க்காகவே 3 குருமார்கள் முயற்ச்சி செய்தார்கள். ஆனால் நம் மக்கள் புரிந்து கொண்டது. இன்னும் எழுதுகின்றேன். வணக்கம்.