யின் / யாங் ஒரு பார்வை :
உயிர் ஆற்றலை நேர்மறை, எதிர்மறை ஆற்றல்களாக யின், யான்- ஆகப் பார்க்கிறது அக்குபஞ்சர். இவற்றின் இணைவுதான் இயக்கம். இந்த இரண்டு அம்சங்களுக்கு இடையிலான சமன்குலைவு, நோய் என வரையறுக்கப்பட்டுள்ளது.
உறுப்புகளில் நோய் என்பது உடனடியாக தோன்றி விடுவதில்லை. அது பல நாட்களாக உடலில் நாம் கவனிக்காமல் விட்ட பாதிப்புகளின் வெளிப்பாடுகளே நாம் காணும் யின்/யாங் நோய் ஆகும்.
யின் (Yin) :
யின் என்பது கெட்டியான உறுப்புகள். ஆகவே தான் யின்னை பெண் என்று கூறுகின்றோம்.
பெண்மை, குளிர்ச்சி, கருமை, கெட்டியான என இது வகுக்கப்பட்டுள்ளது.
யாங் (Young):
யாங் என்பது குழியுடைய உறுப்புகள்.
யாங்கை ஆண் என்று கூறுகின்றோம். ஆண்மை, வெப்பம், உறுதி, வெளிச்சம், லேசானது என வகுக்கப்பட்டுள்ளது.
ஆன்மீகத்தில் யின்/யாங்:
ஆன்மீகத்தில் யாங் என்றால் உயிர், சிவன் என்று அர்த்தம். யின் என்றால் உடல், சக்தி என்று அர்த்தம். அதனால் சந்திரன் என்றும் சூரியன் என்றும் நாம் யின் / யாங்கை பிரபஞ்சத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.
சந்திரன் என்றால் யின் (உடல்), குளிர்ச்சி, தாய்.
சூரியன் என்றால் யாங்(உயிர்), வெப்பம், தந்தை அல்லது மகன் என்று எடுத்துக் கொள்ளலாம்.