WhatsApp : +91 99 434 765 87
அக்குபஞ்சர் கல்வி
அக்குபஞ்சர் என்பது இன்னும் இந்தியாவில் ஒரு முறையான கல்வியாக கொண்டு வரவில்லை.  இலங்கையில் உள்ள இண்டர்நேஷனல் ஓபன் யுனிவர்சிட்டி ஆஃப் காம்ப்ளிமெண்டரி மெடிசன்-ஸில் அக்குபஞ்சர் குறித்து அஞ்சல் வழிப் படிப்பு இருந்தது இப்பொழுது இருக்கிறதா என்று தெரியவில்லை.

இது தற்போது பி.எஸ்.எஸ்  என்ற மத்திய அரசு மற்றும் ஜெ.எஸ்.எஸ் என்ற அமைப்பின் மூலமும் டிப்ளமோ சான்றிதழ்கள் தனியார் இன்ஸ்டியூட்டகள் மூலம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. 

இந்த மத்திய அரசு பி.எஸ்.எஸ் மற்றும் ஜெ.எஸ்.எஸ் சான்றிதழ் நிறுவனம் இந்தியா முழுவதும் பரவியுள்ளது. 

 அக்குபஞ்சர் கோட்பாடுகளைப் படித்துவிட்டுக் குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த அனுபவம் இருப்பது ஒரு மருத்துவருக்கு அவசியம். இந்தியாவைப் பொறுத்தவரை, புகழ்பெற்ற ஆங்கில மருத்துவர்கள்கூட அக்குபஞ்சர் முறைகளையும் சேர்த்து மருத்துவம் செய்கிறார்கள்.

இங்கு திறமையான பல அக்குபஞ்சர் மருத்துவர்கள் உருவாகி அதனை மிக அற்புதமாக கையாண்டு வருகின்றார்கள். வருங்காலத்தில் அரசாங்கம் அக்குபஞ்சரை முறையான கல்வியாக கொண்டு வரும் பொழுது, அக்குபஞ்சரை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்த முந்தைய அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கும் அங்கீகரம் வழங்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. 

எங்களைப் போன்ற அக்குபஞ்சர் மருத்துவர்கள் இந்த மருத்துவத்தை மக்களுக்கு சேவையாக செய்து அதனால் ஏற்படும் நல்ல மாற்றங்களை வெளிக்கொணரவில்லை என்றால் உங்களால் இதனை தெரிந்து முறையான கல்வியாக கொண்டு வரமுடியாது ஆகவே அரசாங்கம் அக்குபஞ்சர் மருத்துவத்தை முறைப்படுத்தும் பொழுது முந்தைய அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கும் அங்கீகாரம் அழிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.