WhatsApp : +91 99 434 765 87
அக்குபஞ்சரும் பஞ்ச பூதமும்
அக்குபஞ்சரைப் பொறுத்தவரை  அண்டத்தில் உள்ள பஞ்சபூதங்களின் கட்டமைப்பே நம்முடைய உடலிலும் உள்ளது. இதைத் தான் நம் முன்னோர்கள் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் என்று கூறினார்.

இந்த பஞ்சபூதச் சக்திகளின் கட்டமைப்பாகத்தான் நமது உடலும் இருக்கிறது. அண்டத்தில் உள்ள  இந்தப் பஞ்சபூதச் சக்திகள் தான் பிண்டமாகிய நமது உடலில் உள்ள 12 உயிர் உறுப்புகள் வழியாக உயிராற்றலாக ஓடுகிறது. இந்தப் பஞ்சபூதங்கள் அல்லது 12 உயிர் உறுப்புகளுக்கு இடையே எப்போது சமநிலை குலைகிறதோ, அப்போது நோய் ஏற்படுகிறது.

அக்குபஞ்சரில் பஞ்ச பூத உறுப்புக்கள் :
  • இதயம், சிறுகுடல் - நெருப்பு
  • கல்லீரல், பித்தப்பை - மரம்
  • சிறுநீரகம், சிறுநீரகப்பை - தண்ணீர்
  • நுரையீரல், பெருங்குடல் - மெட்டல் (காற்று)
  • மண்ணீரல், வயிறு - மண்
  • இதய உறை, மூவெப்பக்குழி - நெருப்பு