அக்குபஞ்சர் மருத்துவத்தைப் பொறுத்தவரை இலங்கையைச் சேர்ந்த ஆண்டன் ஜெயசூர்யா மிகப்பெரிய அக்குபஞ்சர் மருத்துவ வல்லுநர்.
ஆண்டன் ஜெயசூர்யா அவர்கள் சொல்லும் விளக்கம் : - மனிதக் குலம் அனைத்துக்குமான தீர்வை அக்குபஞ்சர் கையில் வைத்திருக்கவில்லை. அக்குபஞ்சர் தத்துவார்த்த அடிப்படையிலான அறிவியல். அதை முழுமையாக உணர்ந்து மருத்துவம் செய்யக்கூடியவர்களின் கையில் உள்ள ஊசியால் பல அற்புதங்களைச் செய்துவிடமுடியும். இதன் மூலம் அக்குபஞ்சரை அவர் வரையறுத்து விடுகிறார்.
சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த சீன மருத்துவர்கள் இப்போதும் இங்கே பல் மருத்துவர்களாக அறியப்படுகின்றனர்.
தமிழகத்தில் எல்லா நகரங்களிலும் சீனப் பல் மருத்துவர்கள் இருக்கின்றனர். அவர்கள் அக்குபஞ்சர் முறையைக் கொண்டே பல் ஈறை மரத்துப்போக வைத்துப் பற்களை எடுத்தனர். ஆனால் அவர்கள் பாரம்பரிய அக்குபஞ்சரில் இருந்து விலக்கப்பட்டு, பல் மருத்துவர்களாகவே அறியப்படுகின்றனர்.