அக்குபஞ்சர் ஊசி என்ன செய்கிறது?
உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் பரிசீலனை செய்து சிகிச்சை தருவதுதான் அக்குபஞ்சர். உடலை யின், யாங் என்று இரண்டாகப் பிரிக்கிறது அக்குபஞ்சர்.
சந்திரன்தான் யின் என்றும், சூரியன்தான் யாங் என்றும் கூறலாம். அக்குபஞ்சர் ஊசி மூலமாகப் பிரபஞ்சத்தின் அதிர்வலைகளை உடலைச் நோக்கி ஈர்த்து உடலை சமநிலைப்படுத்துவதால் நோய் குணமாகிறது.
உடலில் உள்ள உயிராற்றலை அக்குபஞ்சரில் ச்சி (qi) என்று அழைக்கிறார்கள். அந்த உயிராற்றல் கண்ணுக்குத் தெரியாதது. அந்த கண்ணுக்குத் தெரியாத உயிராற்றலைத் தூண்டிச் சமநிலைபடுத்துவதுதான் அக்குபஞ்சர் மருத்துவம்.
உடலில் மெரிடியன் (meridian) என்று சொல்லப்படும் உயிர் ஆற்றல் பாதை வரை இருக்கிறது. உச்சி முதல் உள்ளங்கால் வரை அக்குபஞ்சர் ஊசி செலுத்தப்படுகிறது.
ஊசி பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூதச் சக்திகளை ஈர்க்கிறது. நீர், நிலம், காற்று, நெருப்பு, வானம் என உடலையும் பஞ்சபூதங்களாக அக்குபஞ்சர் பார்க்கிறது. அக்குபஞ்சர் மருத்துவம் யோக அறிவியலைப் போலவே உடலை ஏழு சக்கரங்களாகப் பிரிக்கிறது. இந்த ஏழு சக்கரங்களை இணைக்கும் இரு உயிர்சக்தி ஓட்டப்பாதைகள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. இந்த இரு சக்தி ஓட்டப்பாதை வழியாக, நமது உள்ளுறுப்புகளுக்கு ஆற்றல் வழங்கப்படுகிறது.