தாய் தனயன் விதி :
அக்குபஞ்சரைப் பொறுத்தவரை ஒரு உடல் உறுப்புக்குச் சக்தியைக் கொடுக்கும் உறுப்பு தாய் ஆகிவிடுகிறது. சக்தியைப் பெறும் உறுப்பு (தனயன்) வாரிசாகிவிடுகிறது.
இது பஞ்சபூத சுழற்ச்சியில் தாய் தனயன் என்று மாறி மாறி இயங்கி வரும்.
நெருப்பு -> மண் -> மெட்டல்(காற்று, ஆகாயம்) -> நீர் -> மரம் இந்த வரிசையில் முதலில் இருப்பது தாயாகவும் இரண்டாவது வருவது தனயானகவும் செயல்படும்.
கணவன் மனைவி விதி :
அக்குபஞ்சரில் ஜோடி உறுப்புக்கள் கணவன் மனைவியாக செயல் புரிகின்றது. ஆதிக்கம் செலுத்தும் உறுப்பு கணவன் உறுப்பாகவும், ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளும் உறுப்பு மனைவி உறுப்பாகவும் செயல்படும்.
கணவன் மனைவி
- இதயம் சிறுகுடல்
- கல்லீரல் பித்தப்பை
- சிறுநீரகம் சிறுநீர்ப்பை
- நுரையீரல் பெருங்குடல்
- மண்ணீரல் வயிறு
- இதய உறை மூவெப்பக்குழி = நெஞ்சுக்கூட்டுப் (பெரிகார்டியம்) பகுதி, அடிவயிறு, இடுப்பு வளையம்.
இவைகளில் ஏதேனும் ஒன்று பாதிப்பானால் உடற் கூறுகள் சமநிலை இழந்து பாதிப்படையும்.