WhatsApp : +91 99 434 765 87
அக்குபஞ்சர் அறிவோம் - முனைவர் க. அரிகிருஷ்ணன
பன்னிரண்டு நாடிகளின் இயக்கத்தால்
    பகுத்தறிந்து நோய்வகைகள் கண்டறிந்து
குணமாகும் புள்ளிகயைத் தெரிவுசெய்து
    கண்ணிமையின் மெல்லியதாய் ஊசிகொண்டு

தீராத நோய்களையும் தீர்த்துவைக்கும்
    திறம்மிகுந்த மருத்துவமே அக்குபஞ்சர்
மருந்துகளோ மாத்திரையோ இதற்கில்லை
    பழங்கால மருத்துவத்தில் இதுவுமொன்று

பஞ்சபூத சக்திகளை உட்கொண்டு
    பஞ்சமின்றி உடலுறுப்பும் இயங்கிவரும்
பஞ்சபூத சக்திகளும் குறைந்துவிட்டால்
    உடலுறுப்பும் சோர்வுற்று நோய்கொள்ளும்

பஞ்சபூத சக்திகளைச் சமன்செய்தால்
    நோய்நொடிகள் இல்லாமல் வாழ்ந்திடலாம்
பஞ்சபூத சக்திகளைச் சமன்செய்ய
    அக்குபஞ்சர் மருத்துவத்தை நாடிடுவோம்,

மருந்தில்லா மருத்துவமாம் அக்குபஞ்சர்
    மருத்துவத்தை கற்றிடலாம் வாருங்கள்
நெருப்புநிலம் காற்றுநீர் ஆகாயம்
    இவைதான் பஞ்சபூத சூழற்சிமுறை

முறைமாறிக் கற்றுவிட்டால் தவறுநேரும்
    சுழற்சிமுறை மாறாமல் நினைவில்கொள்
ஈராறு உறுப்புக்கும் சக்திதரும்
    நெருப்புமுதல் கூறப்படும் பஞ்சபூதம்

இருதயம் சிறுகுடல் இவற்றி னோடு
    இருதயஉ றைமூவெப்ப மண்ட லமென
ஒருநான்கு உறுப்பிற்கு நெருப்பின் சக்தி
    மண்னீரல் இரைப்பைக்கு நிலத்தின் சக்தி

நுரையீரல் பெருங்குடற்கு காற்றின் சக்தி
    சிறுநீரகம் சிறுநீர்பை நீரின் சக்தி
மரம்தருமே கல்லீரல் பித்த பைக்கு
    மறவாது கவனத்தில் வைத்துக் கொள்வீர்,

அக்குபஞ்சர் மருத்துவத்தில் பன்னிரண்டு நாடிகள்
பக்கமாறு உள்ளததை கூர்ந்துகண்டு கொள்ளலாம்

கட்டைவிரல் மணிக்கட்டு ரேகையின் அருகே
    மூன்றுவிரல் அங்குலத்தில் நாடிகள் அமையும்
தொடும்போது தெரிந்துவிடும் அவற்றின் இயக்கம்
    மேலோட்டம் அழுத்தமென கண்டிட வேணும.

நாடிகளை ஒருநாளில் காண்பது அரிது
    தினந்தோறும் பலகையில் பார்த்துநீ பழகு
நாடிகளைக் கற்றறிந்தால் மருத்துவ னாவாய்
    நோய்நொடிகள் தீர்ப்பதனால் சிறப்புடன் வாழ்வாய்,

வலக்கையில் முதலிரண்டு பெருங்குடல் நுரையீரல்
வலக்கையில் பின்னிரண்டு இரைப்பை மண்ணீரல்
வலக்கையில் கடையிரண்டு மூவெப்ப மண்டலம் இருதயஉறை,

இடக்கையில் முதலிரண்டு சிறுகுடல் இருதயம்
இடக்கையில் பின்னிரண்டு பித்தப்பை கல்லீரல்
இடக்கையில் கடையிரண்டு சிறுநீர்ப்பை சிறுநீர கமாயமையும்,

                        முனைவர் க. அரிகிருஷ்ணன M.A., B.Ed., M.Phil. M, Phd., Dip.(Acu)., 
                        இரட்டணை 

Original Link : http://www.thamizhkadal.com/2014/03/blog-post.html