WhatsApp : +91 99 434 765 87
அக்குபஞ்சர் உயிராற்றல் பாதை
அக்குபஞ்சர் :

அக்குபஞ்சர் என்பது லத்தீன் மொழியில் அகுஸ் என்றால்  ஊசி, பஞ்சர் என்றால் குத்துதல் என்ற இரு வார்த்தைகளைச் சேர்த்து உருவான சொல் ஆகும். 

ஊசியால் குத்துவதன் மூலமாக, உடலில் இருக்கக்கூடிய உயிர் ஆற்றல் பாதைகளில் நேரக்கூடிய அடைப்புகளைச் பஞ்சபூதம் என்றழைக்கக்கூடிய பிரபஞ்ச சக்திகளைக் கொண்டும் உடல் இயக்க சக்திகளைக் கொண்டும், உடல் யின், யாங் சமநிலை படுத்தும் சக்தி கொண்டும் சரி செய்வது தான் அக்குபஞ்சரின் அடிப்படை தத்துவம் ஆகும்.


பிரபஞ்ச உயிராற்றல் பாதை :

மருத்துவ அறிவியலின் நான்கு அடிப்டை கூறுகள் :
  • உடற்கூறியல்
  • உடலியக்கவியல்
  • நோய்க்குறியியல்
  • குறை களைவது 
இந்த நான்கு அடிப்படைகளும் மருத்துவ அறிவியலில் அவசியமான ஒன்று ஆகும்.

அக்குபஞ்சருக்கு இந்த நான்கு அடிப்படைகள் உண்டு. இது தர்க்கவாதம், நடைமுறை மருத்துவ உடற்கூறு இரண்டு உடனும் ஒத்துப்போகும். ஆகவே அக்குபஞ்சரும் இந்த பூமியின் தலையாய மருத்துவத்தில் ஒன்றாகும்.

 உயிராற்றல் சமநிலையும் சமன்குலைவும் :

அக்குபஞ்சர் உயிர் ஆற்றல் பாதையில் யின் மற்றும் யாங்கு என்று கூறக்கூடிய உடல் உறுப்பு கூறுகளின் சமநிலைப்பாடு மிக முக்கியமானது. யின் மற்றும் யாங் சமநிலையில் இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை.

யின் என்பது உடலின் 6 கெட்டி உறுப்புகளையும். யாங் என்பது உடலின் 6 குழிவான உறுப்புகளையும் குறிப்பது ஆகும்.

இந்த இரண்டு அம்சங்களுக்கு இடையிலான சமன்குலைவு, நோய் என வரையறுக்கப்பட்டுள்ளது.


அக்குபஞ்சரும் பஞ்ச பூதமும் :

அக்குபஞ்சர் 12 உறுப்புகளின் மூலமாக பஞ்சபூத உயிராற்றலாக ஓடுகிறது. ஒவ்வொரு உறுப்புக்கம் ஒரு இணை உறுப்பும் மற்றும் அந்த உறுப்புகளுக்கு ஒரு பஞ்சபூத மூலகமும் உறுவகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் அந்த உறுப்புகள் பஞ்சபூதத்தை உயிராற்றலாக கொண்டு சென்று உயிரை இயங்கச் செய்கின்றது.

அக்குபஞ்சரில் பஞ்ச பூத உறுப்புக்கள் :
  • இதயம், சிறுகுடல் - நெருப்பு
  • கல்லீரல், பித்தப்பை - மரம்
  • சிறுநீரகம், சிறுநீரகப்பை - தண்ணீர்
  • நுரையீரல், பெருங்குடல் - மெட்டல் (காற்று)
  • மண்ணீரல், வயிறு - மண்
  • இதய உறை, மூவெப்பக்குழி - நெருப்பு