அஸ்வினி :
நைவேத்தியம் : வடபருப்பு
கிழமையில் சிறப்பு : புதன் கிழமை வழிபாடு செய்ய மிக நன்றாக இருக்கும்.
கிழமையில் சிறப்பு : புதன் கிழமை வழிபாடு செய்ய மிக நன்றாக இருக்கும்.
அதிதெய்வம் : வெண்ணிறத்தவளான சரஸ்வதியாகும்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பரிகாரத்தலங்கள் :
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பரிகாரத்தலங்கள் :
- குறிப்பாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இடம்பெற்றிருக்கும் தன்வந்த்ரி பகவான் சந்நதியாகும்.
- சென்னை திருவொற்றியூர் மற்றும் திருவிடைமருதூர் கோயில்களில் உள்ள நட்சத்திர லிங்கங்களில், அஸ்வினி லிங்கத்திற்குத் தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று சென்று வழிபாடு செய்ய நல்லது ஆகும்.
- மற்றும் கூத்தனூரில் உள்ள சரஸ்வதி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம். (வழி: திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்ற சிற்றூரிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர்
- தொலைவில் இருக்கின்றது.)
- கொல்லிமலை அறப்பளீஸ்வர் கோவிலும் உகந்தது தான். (வழித்தடம் : சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்திலிருந்து கொல்லிமலை பேருந்து வசதி உள்ளது. மலையின் மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ள காரவள்ளியிலிருந்து 45கிலோமீட்டர் தொலைவில் அறப்பள்ளி அமைந்துள்ளது.
- அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் எட்டி மரத்திற்கு நீர் ஊற்றுவதும், அதை வழிபடுவதும் சிறந்த பரிகாரம் ஆகும். கசப்பு சுவையுடைய அந்த எட்டி மரம் அஸ்வினி நட்சத்திரத்திரக்காரர்களை காப்பாற்றி வாழ வைக்கும். வழிபட மட்டுமே எட்டிமரம் உண்பதற்கு அல்ல.
மேலே சொல்லப்பட்ட கோவில்கள் போக உங்கள் வீட்டிற்கு அருகில் உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய லிங்கம் இருந்தால் அங்கு சென்றும் நீங்கள் வழிபாடு செய்யலாம்.
முடிந்த அளவு ஜென்ம நட்சத்திரத்தன்று சென்று வழிபடுவது சாலச் சிறந்தது. நம் ஜென்ம நட்சத்திரமே நம்முடைய பிறந்த இருப்பிடம்.
நம் ஜென்ம நட்சத்திரமே பிறந்த நாள் கொண்ட உகந்தது ஆகும்.
எதிர்மறை குணங்கள் விலக அல்லது அதனால் ஏதும் பாதிப்புக்கள் வராமல் இருக்க அஸ்வினி நட்சத்திர அன்பர்கள் கீழே உள்ள சுலோகங்களை தினமும் செய்து வாருங்கள் :
அஸ்வினி தேவர்கள் மந்திரம் :
அஸ்வினீ தேவதே ஸ்வதே வர்ணௌ தாவஸ்விநௌ துமஹ:
சுதா சம்பூர்ண கலச கரால்ஜௌ அஸ்வ வாசுகநொள
சரஸ்வதி தேவி காயத்ரி மந்திரம் :
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யை ச தீமஹி
தன்னோ வாணீ ப்ரசோதயாத்
-----------
மேலும் ஒரு சில சரஸ்வதி மந்திரங்கள் உங்களுக்காக கிழே உள்ள இவைகளை கூறுவதால் சரஸ்வதி ஆசீர்வாதமும் அன்பும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஓம் ஐம் க்லீம் ஸெளம் வத வத வாக் வாதின்யை
ஸ்வாஹா (108 முறை)
********************************************
ஸ்ம்ருதி சக்தி ஜ்ஞான சக்தி
ப்ரதிபா சக்தி ரூபிணீ
கல்பனா சக்தி யுக்தாயை
தஸ்யை வாண்யை து மங்களம் (3 முறை)
ஜென்ம நட்சத்திரம் அன்று மந்திரம் உச்சாடனம் செய்யத் தொடங்கி 45 மற்றும் 48 மற்றும் 108 நாட்கள் வரை 108 முறை ஸ்லோகம் சொல்வது சிறந்தது ஆகும்.