- கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் உள்ள சிவன் கோவிலில் கழுதை வாகனத்தில் சிவன் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிவனை வழிபட்டால் நற்புகழ் கிடைக்கும்.
- ஹரியானா மாநிலத்தின் தலைநகர் சண்டிகர் அருகில் ஒரு குன்றின் மீது சண்டிதேவி இருக்கிறாள். அவள் பெயரில்தான் இந்நகரம் ஏற்பட்டுள்ளது.
- தஞ்சாவூர் மாவட்டம் திருநெய்தானம் என்ற இடத்தில் நெய்பாடியப்பர் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இளமங்கை அம்மன் என்ற பெயரில் அம்பாள் அருள்புரிந்து வருகிறார்.
- திருச்சிக்கு அருகே குளித்தலை மணப்பாறை வழியில் ரத்தினகிரி சிவாலயம் உள்ளது. இந்த சிவனுக்கு அபிஷேகிக்கப்படும் பால் உடனே தயிராக மாறி விடுகிறது.
- சப்ஜா விதையை தண்ணீரில் போட்டவுடன் பனங்காய் அளவுக்கு பெருகும்.
- நம்மாழ்வார் பிறந்த ஊர் திருக்குருகூர் மற்றும் ஆழ்வார் பிறந்த ஊர் திருநகரி ஆகும்.
- கோயிலில் உள்ள மகத்துவமான மரத்தின் அடியில் பெருகின்ற மண் உருண்டைகள் மருந்து பிரசாதமாக தரப்படுகின்றது. அப்படிப்பட்ட ஸ்தலங்கள் சங்கர நாராயணன் கோயிலில் புன்னைமரம், வைத்தீஸ்வரன் கோயிலில் வேம்படி மண், திருப்பெருந்துறை முகுந்த மரத்தடி மண் ஆகும்.
- இந்திரன் வாலி ஆகவும் கதிரவன் சுக்ரீவனாகவும் அவதரித்தார்.
- மூட்டை மூட்டையாக மிளகாய் கொட்டினாலும் நெடி வராத ஆலயம் கும்பகோண மாவட்டத்தில் உள்ள ஐவர்பாடியில் உள்ள மகா பிரத்தியங்கார தேவி ஆலயம் ஆகும்.
- வைணவர்கள் ஐந்து திருத்தல பெருமானை ரங்கநாதன்களாக போற்றி வணங்கும் ஸ்தலங்கள் :
காவேரி ரங்கன் - திருவரங்கம்
பரிமளரங்கன் - திருஇந்தலூர்
கல்யாணரங்கன் - திருநகரி
கஸ்தூரி ரங்கன் - திருக்குடந்தை
ஹேமரங்கன் - திருநாகூர் - கண்ணன் ஆலயத்தில் பூஜையின் போது நாதஸ்வரம் தவில் இல்லாமல் புல்லாங்குழல் வாசிக்கும் ஆலயம் நாகர்கோவில் அருகே பாண்டியபுரத்தில் அழகியகம் நம்பிகண்ணன் கோயிலில் உள்ளது.
- கர்ப்பககிரகத்தில் உள்ள தூண்களை கட்டித் தழுவி கொண்டாடும் கோவில் கும்பகோணம் அருகில் உள்ள ஆத்தூர் கோயில் ஆகும்.
- விஷ்ணு ஆலயங்களில் எதிரேதான் கருடாழ்வார் இருப்பார். ஆனால் இடதுபுற ஓரமாக வைத்திருக்கும் ஆலயம் திருநெல்வேலியில் உள்ள தென்திரும்பேரை ஆலயம் ஆகும்.
- தானம், பச்சாதாபம், சந்தோஷம், அடக்கம், எளிமை, உண்மை, கருணை ஆகிய இவை ஏழும் வைகுண்டத்தின் வாயில்கள் ஆகும்.
- இந்தியாவிலேயே இராமபிரான் இரண்டு இடங்களில் மட்டும்தான் பட்டாபிஷேகக் கோலத்துடன் காட்சி தருகிறார். ஒன்று அவர் பிறந்த அயோத்தி மாநகர், மற்றொன்று தமிழகத்தில் உள்ள கோயில் மாநகரமான கும்பகோணமாகும்.
- ஸ்ரீசைலம் மல்லிகார்ஜீனர் ஆலயத்தில்
- மருதமரம்
- மலைமல்லி
- கொடிமல்லி
- செடிமல்லி
- அடுக்குமல்லி
- மரமல்லி
என்கிற ஆறு மரங்கள் தலைமரங்களாக விளங்குகின்றன.