இரவில் முதல் ஜாமத்தில் மலை சுமார் 6 மணி முதல் இரவு 8:30 மணிக்குள் கண்ட சொப்பனம் ஒரு வருடத்தில் பலிக்கும்.
இரவில் 2-ம் ஜாமத்தில் அதாவது 8.30 முதல் 10:45க்குள் கண்ட சொப்பனமும் 3-ம் ஜாமத்தில் இரவு 8:30 முதல் 1:00 மணிவரை கண்ட கனவு 10 தினங்களில் நடைபெறும்.
4-ம் ஜாமத்தில் அருணோதயத்தில் விடியற்காலையில் 3.30 முதல் 6.00க்குள் கண்ட சொப்பனம் உடனே பலிதமாகும். நல்ல சொப்பனம் கண்டால் மறுபடியும் நித்திரை (செய்யலாகாது) கூடாது. கெட்ட சொப்பனம் கண்டால் கடவுளை தியானித்து பிறகு நித்திரை செய்ய வேண்டும்.
சுப சொப்பனங்கள் :
யானை, பசு, எருது, அரண்மனை, மலை உச்சி, தேவாலயங்கள், விருஷம் இவைகளில் மேலேறுதல், மாமிச பக்ஷணம், தயிரன்னம், புசித்தல், வெள்ளை வஸ்த்திரம் தரித்தல், இரத்னாபரணங்கள் காணல், சந்தனம் பூசிக் கொள்ளல், வெற்றிலை பாக்கு தரித்தல், கற்பூரம், அகில், வெள்ளை புஷ்பம் இவைகளைக்கு கண்டால் சொற்ப சம்பத்துண்டாகும்.
வெண்ணிறப்பாம்பு கடித்தல், தேள் கடித்தல், சமுத்திரம் தாண்டல், நெருப்பில் அகப்படுதல், மலஜலம் இவைகளைக் கண்டால் தன லாபமுண்டு.