கல்லீரலில் இருந்து வரும் பித்த நீரை ஜீரணத்திற்கு ஏற்றவாறு கெட்டிபடுத்தி தன்னுள் சேமித்து வைப்பது பித்தப்பை.
உண்ட உணவு இரைப்பையில் இருந்து சிறுகுடலுக்கு வரும்போது பித்தப்பையில் இருக்கும் கெட்டிப்படுத்தப்பட்ட பித்த நீர் முன் சிறுகுடலுக்கு சென்று அங்குள்ள உணவை ஜீரணம் செய்யும்.
சாப்பிட்ட உணவு சிறுகுடலுக்கு வரும்போது மட்டுமே இந்த பித்த நீர் முன்சிறுகுடலுக்குள்(டியோடினம்) வரும். அந்த குழாயின் பெயர் கால் டக்ட்.
உணவு சிறு குடலுக்கு வரும் வரை அது பித்தப்பையிலேயே இருக்கும்.அதுவும் கல்லீரலில் இருந்து வந்த திரவம் நீர்த்து போய் இருக்கும்.
அதையே ஜீரணம் செய்ய ஏதுவாக கெட்டியாக (கான்ஸண்ட்ரேசனாக) மாற்றி பித்தப்பை வைத்து இருக்கும்.
இது இயற்கை நமது உணவு செரிமானத்திற்காக இயற்கையாகவே இருக்கும் விசயம்.
இதில் தோன்றும் கற்கள் ஏன் வருகிறது என்ற மூல காரணம் தெரியாத ஆங்கில மருத்துவம் பித்தப்பையை அகற்றுகிறது
அதில் உள்ள கல்லை அகற்றுவதற்கு பதிலாக பித்தப்பையையே அகற்றிவிடுகிறது.
இப்போது சொல்லுங்கள் பித்த நீர் நீர்மமாக உள்ளதை கெட்டிபடுத்தி சேமித்து வைத்திருந்து ஜீரணம் நடக்க உதவி செய்வது பித்தப்பை என்றால் அதனை வெட்டி எடுத்தால் என்ன நிகழும்.
1. கல்லீரலில் இருந்து வந்த பித்த நீர் கெட்டியாக மாறாமல் ஜீரணம் செய்ய ஏற்ற நிலையில் இல்லாமல் போகும்.
2.கல்லீரலில் இருந்து வரும் நீர் நேரடியாக முன் சிறுகுடலுக்கு செல்லும் உணாவு சிறு குடலில் இல்லாமலேயே.
3. பித்தப்பை நீக்கப்பட்டவர்கள் திடமான ஆகாரங்கள் ஏதும் உண்ணமுடியாத சூழல் வரும்.
4. அஜீரண கோளாறுகள் வரும்.
5.அஜீரணம் என்ற பிரச்சினை வந்தாலே அனைத்து (வாயுத்தொல்லை,நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல்,தலைவலி உட்பட) நோய்களும் வருமே.
பித்தப்பையில் கல் இருந்தால் ஒருவேலை உங்களுக்கு வலி ஏற்பட்டால் அந்த வலி உடல் அந்த கல்லை பித்தபையில் இருந்து வெளியேற்ற செய்யும் முயற்சியே ஆகும். அப்போது பசி எடுக்காது. அந்த சமயம் உணவு ஏதும் எடுக்காமல் ஓய்வில் இருந்தாலே போதும்.
சரி பித்தப்பையை எடுத்தவர்களுக்கு என்ன செய்வது.
ஒன்றும் செய்ய வேண்டாம் மருந்து மாத்திரைகள் ஏதும் எடுத்துக்கொள்ளாமல் பசி உணர்வை மட்டும் உணர்ந்து உணவு உண்டாலே போதும்.