WhatsApp : +91 99 434 765 87
நான் கண்ட பேஸ்புக் விசயத்தில் எனக்கு பிடித்த குழந்தை அறிவோம்
உங்கள் குழந்தை தனது செயல்களை இரகசியமாக செய்கிறது என்றால்

குழந்தையின் சிறிய தவறுகளைக் கூட ஊதிப் பெரியதாக்கி அதையே குத்திக் காட்டிக் கொண்டிருக்கிறோம் என்று பொருள்.

உங்கள் குழந்தைக்கு முன்கோபம் வருகின்றது என்றால்

நீங்கள் குழந்தையை பொதுவாக(போதுமான அளவில்) பாராட்டவில்லை என்று பொருள். அதனால் தான் குழந்தை கோபப்பட்டு பெற்றோரின் கவனத்தை ஈர்க்க பார்க்கின்றது என்று பொருள்.

உங்கள் குழந்தை பயந்த சுபாவத்துடன் இருந்தால்

நீங்கள் குழந்தையையின் தேவைக்கு முன்பே உதவுகின்றீர்கள் என்று அர்த்தம். அவர்கள் பாதையின் முன் உள்ள தடைகளை நீங்களே எளிமைப்படித்திக் கொடுக்காதீர்கள். குழந்தையின் தடைகளை அவர்களாகவே தகர்க்க அவகாசம் கொடுங்கள்.

உங்கள் குழந்தை பொறமை குணத்துடன் இருந்தால்

நீங்கள் உங்கள் குழந்தையை (மற்றவர்களுடன்) மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுகின்றீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் குழந்தை பொய் சொல்கிறது என்றால்

நீங்கள் உங்கள் குழந்தை கடந்த முறை செய்த தவறுக்காக கடுமையாக (அளவுக்கு அதிகமாக) திட்டியிருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் குழந்தை உங்களை வேண்டுமென்றே தொந்தரவு செய்தால்

நீங்கள் உங்கள் குழந்தைக்கு போதுமான அரவணைப்பு கொடுக்க வேண்டும் என்று குழந்தை எதிர்பார்க்கின்றது என்று அர்த்தம். குழந்தையை கட்டியணைத்து அரவணைக்க வேண்டும் என்று குழந்தை விரும்புகின்றது என்று பொருள்.

உங்கள் குழந்தைக்கு நீங்கள் அதிகமாக பொருள் வாங்கிக்கு கொடுத்தாலும், குழந்தை தனக்கு சொந்தமில்லாத பொருள்களின் மேல் ஆர்வம் காட்டுகின்றது என்றால் 

நீங்கள் உங்கள் குழந்தைக்கு (தேவையான) பிடித்த பொருட்களை தேர்ந்தெடுக்க அனுமதிக்கவில்லை என்று அர்த்தம்.

உங்கள் குழந்தையால் சுயமாக முடிவுவெடுக்க முடியாவிட்டால் 

நீங்கள் உங்கள் குழந்தையின் செயல்களை பொது இடத்திலும் உங்கள் குடும்பத்தினர் முன்னிலையிலும் உங்களுக்கு பிடித்த மாதிரி அவர்களின் செயல்களை மாற்றிக் கொண்டு(ஒழுங்குபடுத்திக் கொண்டு அல்லது திருத்திக் கொண்டு) இருந்தீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் குழந்தை மற்றவர்களின் உணர்வை பொருட்படுத்தவில்லை என்றால்

நீங்கள் உங்கள் குழந்தைக்கு அன்பாக சொல்லாமல் உத்தரவாக இடுகின்றீர்கள் என்று அர்த்தம், அதன் உணர்வை மதிக்கவில்லை என்று அர்த்தம்.


உங்கள் குழந்தை மரியாதை இல்லாமல் பேசுகின்றது அல்லது நடந்து கொள்கின்றது என்றால்

உங்கள் குழந்தை மரியாதை இல்லாத தன்மையை பெற்றோரிடம் இருந்தோ அல்லது தான் அதிகமாக சந்திக்கும் நபரிடமிருந்தோ கற்றுக்கொள்கின்றது என்று அர்த்தம் ஆகும்.