WhatsApp : +91 99 434 765 87

Warning: Undefined array key "page" in /home1/eraath2v/public_html/www.srinesiga.com/page.php on line 224
யூடுயுப்பில் என்ன தவறு நடந்து இருக்கும் என்று நானாக யோசித்த சில விசயங்கள்
உங்கள் பதிவுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் உங்களது கம்யூட்டரில் பதிவு செய்து கொள்ளுங்கள். யூடுயுப் என்பது ஒரு தெளிவான வளைத்தளம் கிடையாது.
அது எப்போது வேண்டுமானாலும் காரணம் சொல்லாமல் உங்கள் பதிவுகளை அழித்து விடும். அது சிஸ்டமெடிக் புரோகிராம்.

எல்லோரும் தெரிந்து எந்த தவறும் செய்வதில்லை. நான் யூடுயுப்பில் என்ன தவறு செய்தேன் என்று அந்த நிர்வாகம் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அதை திருத்திக் கொள்ள வாய்ப்பும் அழிக்கவில்லை. 

யூடுயுப்பில் என்ன தவறு நடந்து இருக்கும் என்று நானாக யோசித்த சில விசயங்கள் :

1. நான் என்னுடைய எல்லா வீடியோக்களிலும் விளம்பர ஆப்சனை ஆக்டிவேட் செய்து வைத்திருந்தேன்.
2. மேலும் என்னுடைய குங்குபூ மாஸ்டர் கொடுத்த வீடியோவை அப்லோடு செய்து வைத்து இருந்தேன். அதில் அவர் காப்பிரைட் மியுசிக்கை வைத்து வீடியோ எடுத்து இருந்தார். அதனால் ஆகியிருக்கலாம்.
3. நான் எனது பதிவுகளை ஷேர் செய்வதற்க்காக வியு செய்து அனைத்து சோசியல் மீடியாவிலும் ஷேரிங் கொடுத்துக் கொண்டு இருந்தேன். சில நேரங்களில் மொபைலில் இருந்து அப்லோடு செய்யும் பொழுது அனைத்து சோசியல் மீடியாவிலும் ஷேர் செய்ய முடியாது. ஆகவே நான் அப்படி வியு செய்து ஷேர் செய்தேன்.
4. அதுவும் இல்லாமல் என்னிடம் நிறைய விஷயங்கள் இருப்பதால் அது அத்தனையும் யூடுயுப்பில் பதிவிட ஆசைப்பட்டு தொடர்ந்து அப்லோடு செய்தேன். ஏன் என்றால் என்னைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள அது ஒரு நல்ல வளைத்தளமாக இருந்து செயல்படுகின்றது என்று நினைத்து என்னுடைய நேரத்தை செலவிட்டு விட்டு விட்டேன்.
5. ஐசிஐசிஐ இன்சூரன்ஸினால் என் சகோதரன் அடைந்த பாதிப்பை பதிவு செய்து இருந்தேன்.
6. ஆன்மீகக் கருத்துகளை எனது புரிதலில் பேசிக் கொண்டு இருந்தேன்.
7. ஜோதிடம், வாஸ்து, நியுமராலஜி போன்றவைகளை வகுப்பு எடுக்கத் தொடங்கியிருந்தேன்.
8. கம்யூட்டர் சம்பந்தமானவைகளை வகுப்பு எடுக்கத் தொடங்கியிருந்தேன்.
9. மருத்துவம் சம்பந்தமான ஆலோசனைகள் மற்றும் வகுப்பு எடுக்கத் தொடங்கியிருந்தேன்.(அக்குபஞ்சர், நேச்சுரோபதி, ரிவ்லக்ஸாலஜி, டார்ன் மெத்தடு, மேலும் பல.)
10. சொந்தமாக பாடல்கள் எழுதி அதை சினிமா போஷ்டர்களை வைத்து அந்த படத்திற்க்கானது என்று பதிவிடத் தொடங்கியிருந்தேன். சொந்தமாக டைட்டில் பாடல்கள் எழுதி பாடத் தொடங்கியிருந்தேன்.
11. சொந்தமாக கதை சொல்லத் தொடங்கியிருந்தேன்.
12. என் சொந்தமாகவும் பள்ளிப்பாடல்களையும் கற்பனைப்பாடல்களையும் குழந்தைகளுடன் பாடல்கள் பாடி பதிவிடத் தொடங்கியிருந்தேன்.
13. அதுபோக தமிழ்நாட்டு மக்களுக்காக மீத்தேன் போன்ற பிரச்சனைகள் பற்றி உயர் அதிகாரிகளுடன் பேசுவதாக நினைத்து அவர்களுக்கு கோரிக்கை வைத்து இருந்தேன்.
14. டேக் மற்றும் டிஸ்கிரிப்ஸன் போன்றவைகளில் தலைப்பு சம்பந்தமானவைகளை பதிவிட்டு இருந்தேன்.

இதில் எங்கே தவறு என்று தெரியவில்லை. ஆகவே நண்பர்களே உங்கள் யூடுயுப்பில் அப்லோடு செய்யும் பொழுது கொஞ்சம் கவனமாக இருங்கள். நன்றி.