எனது சகோதரன் ஜெய்கிருண்ஷ்ணன் அவர்கள் ஐசிஐசிஐ பேங்கில் ஒரு வருடாந்திர பாலிசி(ICICI Prudential Life Insurance (Advance Cash Back)) எடுத்து இருந்தார். அவர் கடந்த 3 வருடங்களாக வருடம் 30,000 ரூபாய் பணம் அந்த இன்சூரன்ஸ் பாலிசிக்காக செலுத்தி வந்தார்.
தற்சமயம் இந்த வருடம் இந்த மாதம் (அக்டோபர் 2016) சென்று அந்த இன்சூரன்ஸை குளோஸ்(நிறுத்திவிட்டு) பணம் பெற்று வந்துள்ளார். ஐசிஐசிய பேங்க் நிறுவனம் 43,000 ஆயிரம் கொடுத்து அனுப்பி உள்ளார்கள். மொத்தம் 3 வருடம் சேர்த்து கட்டிய தொகை 90,000 ஆனால் அவர்கள் திருப்பிக் கொடுத்தது. வெறும் 43,000 மட்டுமே.
மீதி 47,000 யிரத்திற்கு கணக்கு கேட்டால் அது மொத்தமும் பேப்பர் சார்ஜ் மற்றும் குலோசிங் சார்ஜ் என்று கூறி 47,000 ரூபாயை தர மறுத்து, என் சகோதரனிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு 43,000 ஆயிரத்தை கொடுத்து அனுப்பி விட்டார்கள்.
நன்றி அந்த ஐசிஐசிஐ பேங்க் நிர்வாகத்திற்கு, இது போன்று சேவை செய்தால் ஐசிஐசிஐ பேங்க் வளரும், அதில் இணைந்து இருக்கும் நடுத்தர மக்கள் அழிந்து போவர்கள்.
ஆகவே நண்பர்களே பேங்கில் ஏதாவது பாலிசி எடுப்பதாக இருந்தால் கொஞ்சம் கவனமாக இருங்கள். நன்கு விசாரியுங்கள், அந்த பாலிசியின் பெணிபிட்டு என்ன, அதில் கட்டக் கூடிய தொகை உங்களால் சமாளிக்கக் கூடியதா என்றெல்லாம் யோசியுங்கள் இல்லாவிட்டால் என் சகோதரனுக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும், ஏன் ஐசிஐசிஐயில் வேலை செய்யும் ஊழியருக்குக் கூட இப்படி நடக்க வாய்ப்புள்ளது.
மக்களே அவசரத் தேவை வாராது என்று தெரிந்தால் மட்டும் இது போன்ற பாலிசியை போடுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் ஏமாந்து போவீர்கள். 15 வருடம் கழித்து தான் இதன் பெனிபிட் கிடைக்குமாம். ஆனால் 15வருடம் கழித்து என்ன ஆகும் என்பது தெரியாது. அதனால் எதுவாக இருந்தாலும் ஐசிஐசிஐ மற்றும் பிற வாங்கிகளே கொஞ்சம் மக்களிடம் நீங்கள் கொடுக்கும் பாலிசிகளை பற்றி முன்பே தெளிவாக சொல்லிவிடுங்கள்.
என் சகோதரனை ஒரு பேங்க் மேனேஜர் திரும்ப திரும்ப இது நல்ல பாலிசி என்று சொன்னதால் தான் நாங்கள் இந்த பாலிசியை போட்டோம். ஆனால் இன்று பாதிப்படைந்தது என் சகோதரன். வேண்டாம் இந்த மாதிரி எந்த நிர்வாகமும் நடத்தாதீர்கள். ஏன் என்றால் சேமிக்க வேண்டும் என்று நினைத்து செயல்படுத்துபவர்கள் மத்தியில் இது போல் புள்ளுருவி பாலிசீகள் இருப்பது அவ்வளவு சிறப்பு கிடையாது.
இறைவா எங்களையும் எங்களைப் போன்ற சாதரண மக்களையும் கொஞ்சம் காப்பாற்றுங்கள். நன்றி!
மக்களே பேங்க் நண்பர்களே பேங்க் அதிகாரிகளே கவனமாக இருங்கள், ஏமாற்றுகின்ற பாலிசிகள் அதிகமாகிவிட்டது.
அதனால் கவனமாக இருங்கள் இல்லாவிட்டால் ஏமாற்றுகின்ற பாலிசிகள் உங்களுக்கு பாதுகாப்பு என்று கூறி உங்களின் பணத்தை தின்று விடும்.
உங்களையும் நடுத்தெருவில் நிறுத்தி விடும்.
மக்களே, பேங்க் நண்பர்களே, பேங்க் அதிகாரிகளே கவனமாக இருங்கள்.
அந்த பாலிசியின் பெயர் : ICICI Prudential Life Insurance (Advance Cash Back)
https://youtu.be/Auie_IyrJvY
Warning: Undefined array key "page" in /home1/eraath2v/public_html/www.srinesiga.com/page.php on line 224
ICICI Prudential Life Insurance (Advance Cash Back)