WhatsApp : +91 99 434 765 87

Warning: Undefined array key "page" in /home1/eraath2v/public_html/www.srinesiga.com/page.php on line 224
மஞ்சள் மருத்துவம்

மஞ்சளையும், கடுக்காயையும் சம அளவு எடுத்து அரைத்து கலக்கவும். இரவு படுக்கும் முன் கால் விரல்களைச் சுத்தம் செய்த பின் சேற்றுப் புண் வந்த இடத்தில் தடவினால் சில நாட்களில் சேற்றுப்புண் குணமாகும்.

அஜீரணம், வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் கொஞ்சம் மஞ்சள் தூளை சாதம் வடித்த கஞ்சியில் கலந்து அதனை குடித்தால் குணமாகும்.

இருமல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டவர்கள் ஒரு டம்ளர் பாலில் மஞ்சள்தூள் அரை ஸ்பூன், பூண்டு, கொஞ்சம் கற்கண்டு சேர்த்து நன்கு காய்ச்சி சூட்டுடன் பருகினால் தொண்டை இதமாகும்.

மஞ்சள் தூளை தேனில் குழைத்துச் சாப்பிட்டால் விடாது இருக்கும் இருமல் அடங்கும்.

ஜலதோஷம் பிடித்திருந்தால் மஞ்சள் துண்டின் முனையை நெருப்பில் காட்டிப் பற்றவைக்கவும்.

அதிலிருந்து கிளம்பும் புகையை முகர்ந்தால் ஜலதோஷம் குணமாகும்.

இரத்தக்கட்டு, சீழ் கட்டிகளினால் அவதிப்படுபவர்கள் சூடாக்கிய சாதத்தோடு மஞ்சள் தூளைக் கலந்து பிசைந்து பாதிக்கப்பட்ட இடத்தின்மேல் சூட்டோடு பரப்பிக் கட்டுப் போட்டால் விரைவில் குணமடையும்.

சுண்ணாம்பையும், மஞ்சளையும் சேர்த்துக் குழைத்துப் போட்டால் நகச்சுற்று மறைந்துவிடும். சரும நோய்களுக்கு பச்சை மஞ்சள், அறுகம்புல், வேப்பிலை, பாசிப்பயிறு இவற்றைச் சேர்த்து அரைத்து அவ்விழுதைக் குளிக்கும்முன் தடவி சிறிது நேரம் கழித்துக் குளித்து வரவும். பெரும்பான்மையான சருமத் தொல்லைகள் நீங்கும்.

Original Source : http://www.athometheva.yolasite.com/

I refered this details above url.