WhatsApp : +91 99 434 765 87

Warning: Undefined array key "page" in /home1/eraath2v/public_html/www.srinesiga.com/page.php on line 224
திருமணப் பொருத்தம்
நட்சத்திர திருமணப் பொருத்தம் என்பது ஜோதிடத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து செயல்படுகிறது.

நட்சத்திரம் வாயிலாக - திருமணப் பொருத்தம் நிர்ணயம் 

1. தினப் பொருத்தம் :
பெண்ணின் நட்சத்திரலிருந்து ஆணின் நட்சத்திரம் வரும் வரை எண்ணி வந்த தொகையை 9-ல் வகுக்க மீதி 2,4,6,8,9 வந்தால் சுபம். மீதி 1,3,5.7 வந்தால் அசுபம்.

உதாரணம் : பெண்ணின் நட்சத்திரம் அசுபதி ஆணின் நட்சத்திரம் கிருத்திகை என்று வந்தால் அசுபதியிலிருந்து எண்ணி வருகின்ற பொழுது கிருத்திகை நட்சத்திரம் 3 ஆக வருகின்றது. ஆகவே இதனை 9ல் வகுக்க முடியாது. ஆகவே அதனை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கே இந்த 3 மீதி தான் ஆகவே 3 வருவதால் அசுபம் ஆகும். இப்படி வந்தால் தினப் பொருத்தம் இல்லை.

மேலும் ஒது உதாரணம் : பெண்ணின் நட்சத்திரம் ரோகிணி ஆணின் நட்சத்திரம் பரணி என்று வந்தால், பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரம் எண்ணிக் கண்ட தொகை 28 என்று வரும். இங்கு 9 ஆல் வகுத்தால் 18 போக மீதி 8 வரும். 

இங்கு 8 வருவதால் இது சுபம் ஆகும். ஆக இதற்கு தினப் பொருத்தம் உண்டு.

ஏக நட்சத்திரப் பொருத்தம் :
ஆண், பெண் நட்சத்திரங்கள் ஏக(ஒரே) நட்சத்திரமாக வந்தால் கீழே உள்ள நட்சத்திரங்கள் வந்தால் உத்தமம்.
  • ரோகிணி, திருவாதிரை, மகம், அஸ்தம், விசாகம், திருவோணம், உத்ரட்டாதி, ரேவதி இவை 8 நட்சத்திரங்களும் ஆண், பெண் இருவருக்கும் ஒன்றாக வந்தால் சுபம் ஆகும்.
  • அஸ்வினி, கார்த்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் ஆக மொத்தம் 10 நட்சத்திரங்கள். இந்த 10 நட்சத்திரங்களும் பெண்ணிற்கும் ஆணிற்க்கும் ஏக நட்சத்திரமாக பொருந்தி வந்தால் மத்திமம் ஆகும்.

மற்றவை ஏக நட்சத்திரமாக வந்தால் பொருந்தாது. 

தின பொருத்தம் பொருந்தினால் தம்பதியர் எப்போதும் மன ஒற்றுமையுடன் இருப்பார்கள்.

கணப் பொருத்தம் :

நட்சத்திரங்களில் தேவ கணம், மனுஷ கணம், ராக்ஷஸகணம் என்று 3 பிரிவுகள் உண்டு. ஒருவருடைய குணநலம் கணத்தைப் பொருத்தே அமைகின்றது. 

  • தேவகணம் எப்போதும் உயந்த சிந்தனைகளுடன் தான் என்ற அகந்தையுடன் இருக்கும். 
  • மனுஷ  கணம் எல்லா மனிதர்களிடத்திலும் ஒட்டி உறவாடி எதற்கும் வளைந்து கொடுக்கும். 
  • ராக்ஷஸகணம் எதற்கெடுத்தாலும் சட்டென கோபப்படுவதும், மற்றவரிடத்தில் இணங்கி செல்லாததையும் குறிக்கும்.

  1. ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே கணத்தில் அமைவது உத்தமம். 
  2. இருவரில் ஒருவர் தேவகணமும் மற்றவர் மனுஷ கணமுமாக இருந்தால், உத்தமம். 
  3. ஆண் ராக்ஷஸ கணமும், பெண் தேவகணமுமாக இருந்தால் மத்திமம். 
  4. பெண் ராக்ஷஸ கணமும், ஆண் மனுஷ கணமுமாக இருந்தால் பொருத்தம் இல்லை.