WhatsApp : +91 99 434 765 87
கோடீஸ்வர தொழிலதிபர் தனது மகனை பணம் சம்பாதிக்க சொந்த உழைப்பில் வேலை செய்ய வேண்டும்
குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி சாவ்ஜி தொலாக்கியா. இவருக்கு 6,000 கோடி மதிப்பிலான நிறுவனம் சூரத்தில் உள்ளது.



கோடீஸ்வர தொழிலதிபர் 21 வயதே நிரம்பிய தனது மகனை (இவரின் மகன் ட்ராவ்யா தொலாக்கியா) சொந்த உழைப்பில் முன்னேறி வாழ்க்கை திறன்களை அறிந்து கொள்ள வெளிமாநிலத்திற்கு சென்று 1 மாதம் வேலை செய்து காட்டு என்று அனுப்பி வைத்துள்ளார். 

அப்படி சென்ற இவர்(ட்ராவ்யா தொலாக்கியா)  வேலைக்கு தேர்ந்த தெடுத்த ஊர் கேரளா ஆகும்..

இவர் தனது மகனை(மகன் ட்ராவ்யா தொலாக்கியா) சொந்த உழைப்பில் முன்னேறி வாழ்க்கைத் திறன்களை அறிந்து கொள்ள செல்லும் பொழுது எந்தக் காரணத்தைக் கொண்டும் என்னுடைய பெயரை உபயோகிக்கக் கூடாது அப்படி உன்னால் வாழ முடிகிறதா என்று 1 மாதம் செய்து காட்டு என்று கூறி அனுப்பி வைத்துள்ளார்.
இதற்கு அவர்(சாவ்ஜி தொலாக்கியா) பின்வரும் நிபந்தனைகளையும் வைத்தார்.

  1. பணம் சம்பாதிக்க சொந்த உழைப்பில் வேலை செய்ய வேண்டும்.

  2. ஒரு வராத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் வேலை செய்யக் கூடாது.

  3. எங்கு சென்றாலும் தந்தையின் பெயரையும் கைபேசியையும் பயன்படுத்தக் கூடாது.

  4. வீட்டிலிருந்து கொண்டு சென்ற 7,000 ரூபாயையும் உபயோகிக்கக் கூடாது.

இப்படி கிளம்பிச் சென்ற இவருக்கு(ட்ராவ்யா தொலாக்கியா) ஐந்து நாட்களாக வேலையும் தங்குவதற்கு இடமும் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் இவர் அமெரிக்காவில் ஏம்.பி.ஏ படித்தவர் ஆவார்.

பின்னர் இவர் தான் ஒரு ஏழைக் குடும்பத்து மாணவன் என்று கூறி வேலை வாய்ப்புக்களை பெறத் தொடங்கினார்.

  • கால் சென்டர், 
  • காலணிக் கடை, 
  • மெக்டொனால்டு கடைகளிலும்  வேலை பார்த்துள்ளார்.

இப்படி அவர்(ட்ராவ்யா தொலாக்கியா) தனது சொந்த உழைப்பில் வாழக் கற்றுக் கொண்டார்.

இப்படி வேலை செய்த இவர் சம்பாதித்த சம்பாத்தியம் வெறும் 4000 ஆயிரம் மட்டும் தான்.

1 மாதம் கழித்து தன்னுடைய தந்தையிடம் திரும்பிச் சென்ற ட்ராவ்யா தொலாக்கியா தன்னுடைய வாழ்வில் வேலை தேடி அலைவது எவ்வளவு கடினமானது என்பதைப் புரிந்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும் சக மனிதர்களிடம் அன்பாக பழக வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டதாக கூறியுள்ளார்.

இன்று பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கோடியை கொட்டி வளர்த்தாலும் இவர் தன் மகனை சொந்த உழைப்பில் வளர்த்துள்ளார். அதுபோக பலபெற்றோர்களுக்கு முன் உதாரணமாக இருந்து உள்ளார்.