முகூர்த்தம் குறிக்க முக்கியமான 5 நிலைகளைக் குறிக்க வேண்டும். கிழமை, நட்சத்திரம், திதிகள், யோகங்கள், லக்னம் போன்ற ஐந்து நிலைகளை ஆராய்ந்து குறிக்க வேண்டும்.
அப்படி குறிக்கும் பொழுது தவிர்க்க வேண்டியவைகளை இங்கு சில விளக்கங்களை கொடுத்துள்ளேன்.
1. கிழமை : பிறந்த கிழமை, சனி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய நாட்களை தவிர்க்கவும். (தற்பொழுது ஞாயிறு சுப நாளாக நடைமுறையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.)
2. நட்சத்திரம்: ஜென்ம நட்சத்திரத்தையும், ஜென்ம நட்சத்திரத்திற்கு தாரா பலன் இல்லாத 3,5,7,10,14,19,22,27 -ம் நட்சத்திரங்களையும், ஜென்ம ராசிக்கு 8-ம் ராசிக்குரிய 2 நட்சத்திரங்களையும் விலக்கவும். பெண்ணின் 1, 10, 19-ம் நட்சத்திரங்களும், ஆணின் 10-ம் நட்சத்திரமும் தாரா பலன் இல்லாவிட்டாலும் கூட திருமணம் செய்யலாம்.
3. திதிகள்: பிரதமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி மற்றும் அமாவாசை, பௌர்ணமி திதிகளை தவிர்க்கவும்.
4. யோகங்கள்: மரண, பிரபலாரிஷட யோகங்களை தவிர்க்கவும்.
5. லக்னம்: ஜென்ம லக்னத்திற்கு (ஆண், பெண் இருவருக்கும்) 6, 8, 12-ம் லக்னங்களை தவிர்க்கவும். மேஷம், விருட்சிக லக்னங்களை தவிர்க்க வேண்டும் என்பது பொது விதி. மற்றும் தனிய நாள், கரிநாள்களையும், ராகு காலம், எமகண்ட காலங்களையும் தவிர்க்கவும்.