ஆசனே கிரிவலம் என்றால் மலை வலம் என்று பொருள். மலை என்பது நாம் வெளியே சுற்றும் மலை கிடையாது. உள்ளிருக்கும் நம்முடன் இருக்கும் மலையை சுற்ற
முடியாதவர்களுக்காக முன்னோர்கள் இப்படி முக்கியமான உயிர் தூண்டலை ஏற்படுத்தக் கூடிய இடங்களை கண்டு பிடித்து அங்கு சென்று சுற்றினால் உள்ளே உள்ள பொருள் புரியும் என்றே இவைகளை உருவாக்கி வைத்துள்ளார்கள்.
அதனால் மலையை சுற்றும் பொழுது சிவ சிவ என்று சொல்லிக் கொண்டே சுற்றுங்கள். சிவ என்றால் வசி என்று அர்த்தம் ஆகும். சிவ சிவ என்றால் வசி வசி என்று அர்த்தம். உங்களுக்குத் தேவையான அனைத்தையும் வசியம் செய்யவே திருவண்ணமலையில் உங்கள் கோரிக்கையை மனதில் வைத்துக் கொண்டு சுற்றி வரும் பொழுது சிவ சிவ என்று கூறச் சொல்லி உருவாக்கப்பட்டது.
அந்த இடத்தில் நெருப்பின் தன்மை அதிகமில். அந்த நெருப்பு நம் உடலில் உள்ள நெருப்புடன் தொடர்பு கொள்ளும் பொழுது அந்த நெருப்பு ஞானத்தையோ 3வது கண்ணையோ அல்லது உங்களுக்கு தேவையானதை இழுக்கும் சக்தியாக உங்களை மாற்றவோ பயன்படும் என்பதால் கிரி வலத்திற்கு திருவண்ணாமலையை தேர்ந்து எடுத்தார்கள்.
அங்கு சென்று அவசர அவசரமாக சுற்றி விட்டு வராதீர்கள். உங்களால் இயன்ற வேகத்துடன் நடந்து ஓய்வு எடுக்கத் தோன்றும் இடத்தில் அல்லது 8 லிங்கம் இருக்கும் இடத்திலாவது உட்கார்ந்து ஓய்வு எடுத்து செல்லவும். வெகு தூரம் நடந்து வரும் பொழுது உங்கள் நுரையீரல் சிறப்பாக வேலை செய்து அனைத்து கழிவுகளையும் வெளியேற்றி உயிர் சக்தியை இழுக்கும் தன்மையை கொண்டு வருவதே இந்தக் கிரிவலத்தின் நோக்கம்.
நாம் உடலில் பிறந்தவுடன் இயக்கம் கொள்ளும் முதல் உறுப்பு நுரையீரல் ஆகும். ஆகவே அந்த உறுப்பை சுத்தப்படுத்தி ஆரோக்கியம் பெற்றால் மனிதன் பெரும் சக்தி பிரம்மாண்டமானது என்பதை உணர்த்தவும் தான் இந்த கிரிவலம் பயன்படுகிறது.
இங்கு நடக்கும் பொழுது உங்கள் மனதை கட்டுப்படுத்தாதீர்கள் அதை புரிந்து கொள்ள முயற்ச்சி செய்யுங்கள். நீங்கள் உங்கள் மனதை கவனீக்கின்றீர்கள் என்றால் அது அமைதியாக மாறிவிடும். அப்பொழுது சிவ சிவ என்று உள்ளே ஓட விட்டுப் பாருங்கள் உங்கள் உடலில் உள்ள சக்கரகங்கள் சுழசுழத் தொடங்கும்.
கிரிவலம் செய்யும் முதல் நாள் நன்றாக ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். மேலும் கிரிவலத்தை மாலை 6 மணிக்கு துவங்க முயற்ச்சி செய்யுங்கள். கிரிவலத்தை இரவில் வைத்தற்க்கு காரணம் இருட்டு என்பது அனைத்து சக்திகளையும் இழுத்துக் கொடுக்கக் கூடிய ஒரு சக்தி வாய்ந்த அமைப்பு ஆகும். அதுவும் பவுர்ணமி என்பது நமது மனமும் உடலும் பிரகாசமாக தெளிவு அடையும் நாள் ஆகும். ஆகவே தான் பவுர்ணமியன்று அதிகமாக கிரிவல
நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் கிரிவலம் செல்லாம் ஒவ்வொரு நாளுக்கும் நீங்கள் எடுக்கும் சக்தியைப் பொறுத்து உங்களுக்கு பலன் உண்டு. அம்மாவாசையன்று செல்லும் பொழுது மட்டும் உங்கள் உடல் மனம் இவைகளை நன்றாக பார்த்துக் கொள்பவர்களே செல்ல வேண்டும். அப்பொழுது தான் அவர்களால் அம்மாவாசையின் பலனை உணர முடியும்.