WhatsApp : +91 99 434 765 87

Warning: Undefined array key "page" in /home1/eraath2v/public_html/www.srinesiga.com/page.php on line 224
பனைமரம் என்பது நீர் ஆதாரத்திற்கு தாய்
பனைமரம் என்பது விவாசய நிலத்துக்கு வேலி, நீரினை தேக்கி வைத்து திரும்ப கொடுக்கும் அற்புதக் கலசம், வீடு கட்டுவதற்கு ஓலை கொடுக்கும், நாம் ஊதி விளையாட பீப்பி கொடுக்கும், நமது குழந்தைகள் விளையாட நோங்கு மட்டை வண்டி கொடுக்கும், நம் உடல் சூடு மற்றும் உள் சூடு தணிக்க நொங்கு கொடுக்கும் ஒரு அற்புதமான உயிரினம் பனைமரம் ஆகும்.

அதுபோக வாழ்வில் ஒரு மரத்துக்கு கால் அளவான அளவு எடுத்துக் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியத்துடனும் பலத்துடனும் இருக்கும். அதிலிருந்து பதனி கிடைக்கும்.

இன்னும் எனக்கு தெரியாத பல விசயங்களை புதைத்து வைத்திருக்கும் பனை மரத்தை நாம் இன்று புதைத்துக் கொண்டு இருக்கின்றோம்.

மேலும் பனங்கருப்பட்டி என்பது ஒரு அற்புதமான மருந்து ஆகும். பனவெல்லம் என்பதும் மருந்து மற்றும் இனிப்பு பொருட்களுக்கு உபயோகப்படுத்தக் கூடிய பொருளாகும்.

ஒரு பனைமரம் வளர்ந்து பலன் கொடுப்பதற்கு 3 தலைமுறையாகும். அப்படிப்பட்ட பாட்டன் அல்லது தாத்தா நட்டு வைத்தால் தான் நாம் பலன் அடைய முடியும். அப்படி என்றால் ஒரு பனைமரத்தின் பயனை அனுபவிக்க குறைந்தது 300 ஆண்டுகள் காத்து இருக்க வேண்டும். அப்படிப் பட்ட பனைமரத்தை வெட்டி சாய்க்க உங்களுக்கு எப்படி மனம் வருகின்றது.

கொஞ்சம் யோசித்து பனைமரத்தைக் காப்பாற்றச் சொல்லவில்லை உங்களை காப்பாற்ற பனைமரம் இருக்கின்றது. அதனை அழித்து விட்டால் உங்களை யார் காப்பாற்றுவார்கள்.