கிழமை என்பது நாம் தினமும் சந்திக்கும் நாட்கள் ஆகும். நம் முன்னோர்கள் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு நாளை கொடுத்துள்ளார்கள். ராகு, கேதுவை நிழல் கிரகமாகக் கொண்டதால் முன்னோர்கள் அதை விடுத்து மிதம் உள்ள 7 கிரகங்களுக்கும் ஒவ்வொரு நாளையும் கொடுத்துள்ளார்கள்.
1. ஞாயிறு - சூரியன் - சிவன்
2. திங்கள் - சந்திரன் - சக்தி
3. செவ்வாய் - செவ்வாய் - முருகன்
4. புதன் - புதன் - பெருமாள்
5. வியாழன் - குரு - தட்ஷிணாமூர்த்தி
6. வெள்ளி - சுக்கிரன் - சயனப் பெருமாள்
7. சனி - சனிபகவான் - ஆஞ்சநேயர் வழிபாடு
இங்கு இருப்பவற்றில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சுப நிகழ்ச்சிகளை செய்வதை தவிர்க்கவும். அப்படி தவிர்க்க முடியாமல் செய்ய வேண்டி இருந்தால் அதிகாலை 4:00 லிருந்து 6:00 மணிக்குள் செய்து கொள்ளவும். இந்த நேரத்திற்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இந்த பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு எந்த விதமான தோஷமும் கிடையாது.