WhatsApp : +91 99 434 765 87
பஞ்சாங்கத்தில் நட்சத்திரம் என்றால் என்ன?
நட்சத்திரம் என்பது ஒரு ஒளி நிறைந்த வெற்றிடமாகும். எந்த கிரகம் அந்த ஒளியிடத்தில் வந்து உற்கின்றதோ அந்த இடம் அந்த கிரகத்தின் நட்சத்திரம் ஆகும்.

வான மண்டலத்தில் கிரகங்கள் செல்லும் நீள் வட்டப் பாதையை 27 பாகங்களாக பிரித்தால், அதன் பாகங்களுக்கு பெயரே நட்சத்திரம் ஆகும்.

ஒருவர் பிறக்கும் அவர் எந்த நட்சத்திரத்தில் சந்திரன் நின்றாரோ அதுவே ஜென்ம நட்சத்திரம் ஆகும்.

நட்சத்திரங்கள் நான்கு பாதங்களைக் கொண்டது ஆகும். அதுபோல வான மண்டலத்தில் கிரகங்கள் செல்லும் பாதையை 12 பாகங்களாக பிரித்தால் அதுவே இராசிக்கட்டம் ஆகும்.

இதில் ஒரு ராசி என்பது இரண்டேகால் நட்சத்திரங்களைக் கொண்டது ஆகும். அதாவது ஒரு இராசி என்பது 9 நட்சத்திர பாதங்களைக் கொண்டது ஆகும். 

மேலும் சந்திரன் எந்த இராசியில் எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அதைப் பொறுத்தே அவரின் திசா புத்தி தீர்மானிக்கப்படுகிறது. இந்த சந்திரன் என்பது பஞ்சாங்கத்தில் உள்ள பஞ்ச அங்களில் முக்கியமான ஒரு பங்கு வகித்து பலன் நிர்ணயம் செய்யப்படுகிறது.