வான மண்டலத்தில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரமே திதியாகும். திதிகளில் வளர்பிறை திதி மற்றும் தேய்பிறை திதி என்று இரண்டு வகையுண்டு.
வளர்பிறை திதியை சுக்லபட்சம் என்றும் தேய்பிறை திதியை கிருஷ்ணபட்சம் என்றும் கூறுவார்கள்.
சூரியனும் சந்திரனும் நெருக்கமாக சேருவதற்கு அமாவசை என்று பெயர். சூரியனை விட்டு சந்திரன் சிறிது சிறிதாக பிரிந்து நிற்பதை பௌர்ணமி திதி என்றும் கூறப்படும்.
ஆக இந்த அமாவாசை திதியிலிருந்து பௌர்ணமி திதி வரையுள்ள நாட்களில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் அதிகமாகிக் கொண்டே செல்லும்,
அதே போல் பௌர்ணமி திதியிலிருந்து அமாவாசை திதி வரை உள்ள காலங்களில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவுகள் குறைந்து கொண்டே வரும்.
வளர்பிறை திதிகள் 15 (சுக்லபட்சம்) மற்றும் தேய்பிறை திதிகள் 15 (கிருஷ்ணபட்சம்) ஆக மொத்தம் 30 திதிகள் ஆகும்.
அமாவாசையிலிருந்து பௌர்ணமியை நோக்கி செல்லும் திதிகள் வளர்பிறை திதிகள் 15 (சுக்லபட்சம்).
பௌர்ணமியிலிருந்து அமாவாசையை நோக்கிச் செல்லும் திதிகள் தேய்பிறை திதிகள் 15 (கிருஷ்ணபட்சம்) ஆகும்.