ஒருவரது ஜென்ம ராசிக்கு 8-ம் ராசிக்கு சந்திரன் வருவதை சந்திராஷ்டமம் என்று கூறுவதுண்டு. ஒரு ராசி என்பது இரண்டே கால் நட்சத்திரத்தை கொண்டது.
உதாரணமாக ஒருவர் மேஷ ராசியில் பிறந்திருந்தால் அவருக்கு விருட்சிக ராசியில் சந்திரன் வரும்போது சந்திராஷ்டமம் உண்டாகும். இதை ஒரு பொது விதியாகவே கொள்ள வேண்டும்.
சந்திரன் விருட்சிகராசியில் சுமார் இரண்டே கால் நாட்கள் இருக்கும். அந்த இரண்டே கால் நாட்களும் அவருக்கு நிறைய மனக்குழப்பங்கள், டென்சன், ஞாபக மறதி போன்றவை ஏற்படும் என்பது பொது விதி.
ஆனால் ஒருவர் தனது ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து எண்ணி வந்த 17வது நட்சத்திரத்தில் மட்டுமே மேற்கண்ட சந்திராஷ்டமம் பலனை அனுபவிக்கின்றார் என்பதே துல்லியமானது.
உதாரணமாக மேஷ ராசியில் அசுவினி நட்சத்திரத்தில் பிறந்த ஒருவருக்கு விருட்சிக ராசியில் உள்ள விசாகம், அனுசம், கேட்டை ஆகிய 3 நட்சத்திரங்களில் சந்திரன் செல்லும் போது சந்திராஷ்டம பலனை தருவதில்லை.
அஸ்வினி நட்சத்திரலிருந்து எண்ணி வந்த 17-வது நட்சத்திரமான அனுஷ நட்சத்திரத்தில் சந்திரன் செல்லும் போது மட்டுமே சந்தராஷ்டம பலன்கள் நடைபெறும்.
அதன்படி உங்கள் நட்சத்திரத்திற்கு எந்த நட்சத்திரம் தீமை தரும்(சந்திராஷ்டம பலனை தரும்) என்பதை கீழ்கண்ட அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளவும். சந்திராஷ்டமம் கொடுக்கின்ற நட்சத்திரத்தை பஞ்சாங்கத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
ஜென்ம நட்சத்திரம் | சந்திராஷ்டம பலனை தரும் 17வது நட்சத்திரம் |
அசுவினி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி |
அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி அசுவினி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் |