WhatsApp : +91 99 434 765 87

Warning: Undefined array key "page" in /home1/eraath2v/public_html/www.srinesiga.com/page.php on line 224
சில உணவுகளின் அளவுகள் அதிகரிப்பதால் ஏற்படும் நோய்கள்

சில உணவுகளை அதிகமாக உண்ணும்போது ஏற்படும் நோய்கள்!

எந்த உணவுகள் அதிகமானால் எந்த நோய் தோன்றும் என்பது கீழே உள்ளது.


=> பச்சரிசி அதிகமானால் : சோகை நோய், சிலருக்கு வயிற்றுப் போக்கும் ஏற்படும்.


=> அச்சுவெல்லம் அதிகமானால் :  அஜீரணம், நாக்கில் எரிச்சல் சிறிய அளவில் புண் ஏற்படும்.


=> பலகாரம் அதிகமானால் : வயிற்று வலி, வயிற்றுப் ஊப்புசம், புளிச்ச ஏப்பம், நெஞ்சு எறிச்சல் ஏற்படும்.


=> இஞ்சி அதிகமானால் : மென் குரலும் இறுக்கமாகும், மலம் கழிக்கும் பொழுது எரிச்சல் ஏற்படும், தொண்டையில் வறட்டு இருமல் அதிகரிக்கும்.


=> பழைய சோறு, கஞ்சி அதிகமானால் : வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும், மலம் கழிக்கும் பொழுது சிலருக்கு கெட்டியாக போகும், உடம்பில் அதிகமாக நீர் கோர்க்கும், முட்டிகள் வீங்கிக் கொள்ளும், சீறுநீரகம் அதிகமாக வெளியேறும், தலை பாரம் ஏற்படும்.


=> தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும், மலம் பிஸின் பிஸினாக பசை போன்று போகும்.


=> மாங்காய் அதிகமானால் : வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும், உடல் சோர்வு ஏற்படும். பல் கூச்சம் ஏற்படும். சிறுநீரகம் செல்லும் பொழுது எரிச்சல் இருக்கும்.


=> கோதுமையை சூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் : வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும், மலம் அடிக்கடி போகும், நெஞ்சு எரிச்சல் இருக்கும், புளிச்ச ஏப்பம் வரும், வாந்தி வருவது போல் இருந்து கொண்டு ஏப்பம் வந்து கொண்டே இருக்கும்.


=> பாதாம் பருப்பு அதிகமானால் : வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும், வயிறு மந்தமாகும், தோல் நீக்காமல் சாப்பிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக அது உயிரை எடுத்து விடும், உடல் மதமதப்பு தன்னை ஏற்படும், சிலருக்கு மவு போன்று மலம் வெளியேறும், ஆணின் உறுப்பின் விரைப்புத் தன்மை வெகு நேரத்திற்க்கு சுருங்காது. செக்ஸ் ரீதியான ஆசை சிலருக்கு அதிகமான அளவில் ஏற்படும்.


=> முற்றிய முருங்கை சாப்பிட : வாயு சளி உண்டாகும், ஆசைகள் அதிகரிக்கும்.


=> எருமைப்பால் அதிகம் குடிக்க : கிட்னி கல், உடல் எடை கூடும், மெதுவாக செயல்படச் செய்யும், நிதனாமாக யோசிக்கச் செய்யும்.


=> மிளகு : தொண்டையில் எரிச்சல் ஏற்படுத்தும், உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும், கண்ணிலும் முக்கிலும் நீர் ஒழுகும், சிறுநீரகம் கழிக்கும் பொழுது எரிச்சல் ஏற்படும்.


=> மிளகாய் அதிகமானால் : வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும், கோபம் அதிகரிக்கும், கல்லீரல் பாதிக்கப்படும், வயிறு புண்ணாகும், இதயம் அதிக இரத்த ஓட்டத்தை செயல் படுத்தி சூடாக இருக்கும்.


=> காபி அதிகமானால் :  நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களும் ஏற்படும், உடல் உலர்ந்து போகும், மூளையை ஒரு வித தூண்டுதல் செய்து ஓய்வு எடுக்க அனுமதிக்காது, சிலருக்கு பதட்டமும், படபடப்பும் ஏற்படும், கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.


=> டீ அதிகமானால் : பொய்த் தோற்றமான சுறுசுறுப்பைத் தரும், உடல் நடுங்கும் கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும், கல்லீரலுக்கு அதிகமான வேலையைக் கொடுக்கும், சிலருக்கு குடல் புண்ணாகிவிடும்.


=> எலுமிச்சை அதிகமானால் : மலம் கட்டிக் கொள்ளும், சிட்ரீக் அமிலம் அதிகரித்து கோபத்தை தூண்டும், பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும்.


=> எள்ளு அதிகமானால் :  உடல் எடை எதிர்பார்த்ததை விடக் கூடும், புளித்த ஏப்பம், நெஞ்சு எரிச்சல் ஏற்படும், பித்தம் செரியாமை உண்டாகும்.


=> உப்பு அதிகமானால் : (High BP) அதிக இரத்த அழுத்தம் ஏற்படும், வயதானவர்களுக்கு இதயத்தில் படபடப்பு ஏற்பட்டு மயக்க நிலைக்கு கூட சிலரை கொண்டு சென்று விடும், கோபத்தை அதிகரிக்கும், உணவினை உண்ண முடியாமல் குப்பையில் போடும்படி ஆகிவிடும், அப்படி உண்டாலும் தொண்டையில் அடைப்பு, நாக்கில் சுவை அறிய முடியாமை போன்றவை ஏற்படும், உயிர் விந்தை குறைக்கும்.


=> வெங்காயம் அதிகமானால் : உணர்ச்சி அதிகரிக்கும், அடித்த போதை இறங்கி போகும். விறைப்புத் தன்மை அதிக நேரம் நீடிக்கும், வாய்யில் இருந்து வெங்காய வடையாக வரும், தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டு கண்ணெரிச்சல் போன்றவைகள் ஏற்படும். தலைவலிக்கும், அறிவழிக்கும், சளி பெருகும்.


=> குங்குமப்பூ அதிகமானால் : மதியழக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைஉறுப்புகளை கோணலாக்கும்.


=> வெள்ளை பூண்டு அதிகமானால் : மூளைக்கு இரத்தத்தை அதிகமாக கொண்டு சேர்க்கும், மூளையில் இரத்தத்தை தேங்க விடாது, உடலில் ஓடும் இரத்தத்தின் அளவு வேகமாக ஓடும், ரத்தம் கொதித்து பொங்கும், கரு அழிக்கும். குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு ஆகிவிடும்.