WhatsApp : +91 99 434 765 87

Warning: Undefined array key "page" in /home1/eraath2v/public_html/www.srinesiga.com/page.php on line 224
தமிழ் மொழி என்பது பிரபஞ்ச உயிர் மொழியாகும்
தமிழ் மொழி பிறந்தது பிரபஞ்ச உயிர்களிடத்தில் இருந்து ஆகும். ஒவ்வொரு எழுத்தும் உயிர்களிடம் இருந்தே எடுக்கப்பட்டது.

மாடு - அம்மா
ஆடு - மே மே
நாய் - உர், வவ், வள்
பூனை - மியாவ்
காகா - கா கா
குயில் - கூ கூ
மயில் - கௌ
சேவல் - கொக்கரக்கோ
பறவைகள் - க்கி, க்வி, கிகீ
பிரபஞ்ச காற்று - அ, ஆ, ஒ, ஓ, ஓம்

இப்படி இன்னும் பல உயிரினங்கள் உரையாடும் ஓசை தான் இங்கு தமிழ் மொழியாக உள்ளது. நீங்கள் எந்த மொழியில் பேசினாலும் தமிழ் மொழியைத்தான் பேச முடியும். ஆங்கிலத்தில் Hello (ஹலோ) என்று கூறினாலும் தமிழ் தான்.

ya ya (யா யா) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இப்படி எந்த வார்த்தையைப் பேசினாலும் அதில் தமிழின் உச்சரிப்பு மட்டுமே தெரியும்.

ஹிந்தியில் ஏக், தோ, சார், பாஞ், க்கியா, மேரா, நாம் என்று உச்சரித்து எழுதி வேறு மாற்றங்களை உருவாக்கினாலும் அதுவும் தமிழே. இங்கு கன்னடம் தெலுங்கு மராத்தி என்று எதை எடுத்து உச்சரித்துப் பார்த்தாலும் தமிழ் உச்சரிப்புக்களை மாற்றி மாற்றி போட்டே வேறு மொழியாக உரையாடுவார்கள்.

ஏன் என்றால் தமிழ் என்பது ஒன்றும் ஒரு சாராருக்கு சார்ந்த மொழி கிடையாது. இது பிரபஞ்சத்தின் ஒலியாகும். அதை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். பிரபஞ்சத்திற்குள் வாழ்ந்து கொண்டு பிரபஞ்சத்தை அழிக்க நினைக்கும் முட்டாள்தனமான வேலையைத் தான் தமிழை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் செய்து கொண்டு இருக்கின்றீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

எவன் ஒருவன் தமிழை அழிக்க வேண்டும் என்று நினைக்கின்றானோ அவன் அவனை அழித்துக் கொள்ள சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்கின்றான் என்று அர்த்தம்.

பிரபஞ்ச மொழியை நேரடியாக உபயோகப்படுத்தினால் அதில் உள்ள அனைத்து சக்திகளையும் பெற முடியும். ஆனால் நீங்கள் இதிலிருந்து உருமாறிய மொழியில் நீங்கள் பயணம் செய்தால் பணம் சம்பாதிக்கலாம்.

ஆனால் எந்தக் காரணம் கொண்டும் இறைத்தன்மையை புரிந்து கொள்ளவோ, பிறவி இல்லா பெருங்கடலை கலக்கவோ முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தமிழ் என்பது பிரபஞ்ச மொழி கொஞ்சம் ஆராய்ந்து அதை மொழியாக கொண்டவர்களையும் அந்த மொழியையும் நீங்கள் மதிக்காவிட்டாலும் மிதிக்காமலாவது இருங்கள்.