WhatsApp : +91 99 434 765 87
சந்திராஷ்டமம் என்பது என்ன? எனது பார்வையின் சந்திராஷ்டமம் எப்படி?
சந்திராஷ்டமம் என்பது  ஜோதிடத்தில் ஒருவருடைய நட்சத்திரத்தில் இருந்து 17வது நட்சத்திரம் வருகின்ற நாளில் ஒருவருடைய நட்சத்திரம் சந்திராஷ்டமம் பெறுகின்றது.

அல்லது சந்திராஷ்டமம் கொடுக்கின்ற நட்சத்திரத்தில் இருந்து 12வது நட்சத்திரமாக ஒருவருடைய நட்சத்திரம் வந்தால் அந்த நாளில் அவருடைய நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் ஏற்படும்.

உதாரணத்திற்கு பூரம் நட்சத்திரத்திலிருந்து 17வது நட்சத்திரம் ரேவதியாகும். ரேவதி நட்சத்திரத்திலிருந்து 12வது நட்சத்திரம் பூரம் ஆகும். இதுபோல் மற்ற நட்சத்திரங்களையும் தாங்கள் ஆய்வு செய்து கொள்ளலாம். 

சந்திராஷ்டமம் என்று சொல்லக்கூடிய இந்த நாளில் பெறும்பாலும் சந்திராஷ்டமம் அடைந்தவர்கள். மனதும் உடலும் ஒருவித நல்ல இயக்கத்தில் இருக்காது. உடலில் ஒருவித சோர்வு இருந்து கொண்டு இருக்கும். மனம் ஒரு குழப்பத்தில் இருக்கும். பேச்சுக்கள் தெளிவாக இருக்காது. மூளை கொஞ்சம் சோர்வாக இருக்கும். அன்றைய நாளில் வம்பு வழக்குகள் வருவதற்கு வாய்ப்பு அதிகம் ஆகும். அன்றைய நாளில் இறைவழிபாட்டின் மூலம் அல்லது பிரபஞ்ச வழிபாட்டின் மூலம் அவர்கள் உடலுக்கும் மனதிற்கும் சக்தி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

எவர் ஒருவர் சரியான முறையில் தியாணம் அல்லது பிரபஞ்ச வழிபாடு அல்லது இறைவழிபாட்டில் உள்ளார்களோ அவர்களே இந்த சந்திராஷ்டம நாட்களில் தங்களை காத்துக் கொள்ளக் கூடியவர்கள் ஆவார்.

சந்திரன் என்பது உடல் மற்றும் மனம் மற்றும் கர்பிணிப் பெண்கள், தாய் ஆகியோரைக் குறிக்க சந்திரனை பெரியோர்கள் உருவகப்படுத்தியுள்ளார்கள்.

எனக்கு கற்றுக் கொடுத்த குருநாதர்கள் அனைவருக்கும் நன்றி!