அனாமிகா முத்திரை அல்லது மோதிர விரல் முத்திரை என்பது மனித உடலில் உள்ள பூமி (பிரித்வி) தத்துவத்தை சமநிலைப்படுத்தும் ஒரு சக்தி வாய்ந்த முத்திரையாகும். இது உடல் உஷ்ணத்தையும், மன அமைதியையும், ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது. அனாமிகா விரல் மண் தத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது; எனவே இந்த முத்திரை மனித உடலில் நிலைத்தன்மை, வலிமை, மற்றும் வளர்ச்சி எனும் பண்புகளை அதிகரிக்கிறது.
இந்த முத்திரையைப் பயிற்சி செய்வதால் உடலின் சீதோஷ்ண நிலைமை சரியாகும் — அதிகமான சூடு அல்லது குளிர் இரண்டுமே குறையும். உடலில் சமநிலை ஏற்பட்டதனால் மனமும் அமைதியாகும். உடலின் சக்தி சுழற்சி இயல்பாக நடைபெற உதவுவதால் உடல் ஆரோக்கியம், தோல் பிரச்சனைகள், மன அழுத்தம், தூக்கமின்மை, செரிமான பிரச்சனைகள் போன்றவை தணியும்.
அனாமிகா முத்திரை பயிற்சி செய்யும் முறை:
- வலது கையின் மோதிர விரலை இடது கையின் நான்கு விரல்களால் மெதுவாகப் பிடிக்கவும்.
- கண்களை மூடி அமைதியாக அமரவும்.
- மெதுவாக ஆழ்ந்த மூச்சை இழுத்து விடவும்.
- மனத்திறையில் பூமியை கற்பனை செய்யுங்கள் — பள்ளங்கள், மேடுகள், வறண்ட நிலங்கள், பாலைவனங்கள் போன்றவற்றை பாருங்கள்.
- பின்னர் பசுமை நிறைந்த இடங்கள், செடிகள், மரங்கள், பச்சை வளர்ச்சியை மனதில் கற்பனை செய்து மகிழுங்கள்.
- நீங்கள் இழுக்கும் ஒவ்வொரு மூச்சும் பூமியில் விதைக்கப்பட்ட விதையை விழித்தெழச் செய்து மரமாக வளரச் செய்கிறது என்று கற்பனை செய்யுங்கள்.
இந்த தியானம் உங்கள் உடலில் உள்ள பூமித் தத்துவத்தை எழுப்பி, வளர்ச்சி, வளம் மற்றும் சமநிலையை அளிக்கும். சில நிமிடங்கள் கழித்து, சிறிய உஷ்ணம் உணரப்படும் — இது உடல் சக்தி இயல்பாகச் சுழல்கின்ற அறிகுறி. பின்னர் கண்களை திறந்து, இதேபோல் இடது கையின் மோதிர விரலை வலது கையால் 5 நிமிடங்கள் பிடித்து அமரவும். பிறகு மெதுவாக தியானத்திலிருந்து வெளியே வாருங்கள்.
அனாமிகா முத்திரையின் நன்மைகள்:
- உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும்
- மன அமைதி மற்றும் நிலைத்தன்மை அளிக்கும்
- பூமித் தத்துவ சக்தியை எழுப்பும்
- உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
- ஆரோக்கியமான செரிமானம், தூக்கம் மற்றும் தோல் நிலையை மேம்படுத்தும்
வாழ்க வளத்துடன்!
ஓம் சரவணபவ ஓம்
ஓம் ரவணபவச ஓம்
ஓம் வணபவசர ஓம்
ஓம் ணபவசரவ ஓம்
ஓம் பவசரவண ஓம்
ஓம் வசரவணப ஓம்
Anamika Mudra (Ring Finger Mudra) – The Earth Element Balance Mudra
Anamika Mudra is a powerful yogic hand gesture that activates the Prithvi (Earth) element within the body. It helps maintain the natural warmth, stability, and vitality of both the body and mind. The ring finger represents the Earth element, symbolizing grounding, strength, and nourishment.
By practicing this mudra regularly, one can balance the body’s internal temperature — neither too hot nor too cold — ensuring physical and emotional harmony. It supports better immunity, skin health, digestion, sleep, and overall calmness.
How to Practice Anamika Mudra:
- Gently hold the right-hand ring finger with the four fingers of your left hand.
- Close your eyes and sit quietly.
- Take slow, deep breaths — inhale and exhale mindfully.
- Visualize the Earth — plains, valleys, deserts, and dry lands.
- Then imagine the Earth turning green — with plants, trees, and forests flourishing everywhere.
- As you breathe, imagine your breath awakening the seed within the Earth, helping it grow into a strong fruit-bearing tree.
This visualization symbolizes your own growth and abundance. As you continue, you may feel a mild warmth in your body — this is your energy harmonizing. After a few minutes, open your eyes, then hold your left-hand ring finger with your right hand for five minutes. Slowly return to awareness.
Benefits of Anamika Mudra:
- Balances body temperature and energy
- Promotes emotional stability and calmness
- Activates the Earth element for strength and grounding
- Improves immunity and physical stability
- Enhances skin health, digestion, and vitality
🌿 Practice Anamika Mudra daily for 10–15 minutes to experience grounding, balance, and prosperity.
📞 Online Consultation: +91 99434 76587 (WhatsApp)
🎓 Join the Muthirai Maruthuvam Online Course – Learn ancient Siddha Mudra healing techniques for body and mind.