இதற்கு சுவாசக் கலை, மூச்சிக் கலை,
கால் மாற்றும் கலை என பல பெயர்களும் உண்டு. இதைப் பற்றி இதுவரை தெரியாத விடயங்களை இங்கு சித்தர்களின் குரல். வாயிலாக பகிர்கிறேன்….
கர்ப்பக் குறியும் போரில் வெல்லும் குறியும்:-
“அன்றே அசைக்கிடைக் கின்றமைந்தனும் சூனியத்தில்
கேடாங்கெடாது இருவர்போருவது சூனியத்தில்ஒது
வடிக்கின்ற மொழியின முதற்சொன்னேன் என்றோர்பன்
மருவியபூரணத்தின் பின்புசொன்னோன் தோற்பன்
நடக்கின்ற சுழிமுனையில் வேட்டலர்கள் டோந்தநட்பாகும்
வலத்து இயங்க நடப்போன் செல்வன்
இடத்தியங்கில் அஞ்சடிபோ யெதிர்த்தோன் வெல்வன்இரும்
வெல்வன் இருஞ் சுழியில்நிற்கில் இடர்இல்லைபாரே”
இதற்கு முன் பாடலில் சூனியத்தில் கேட்ட பிள்ளை இறக்கும் என்றாலும் போர் வழக்கு வாகைக் குறித்து
ஒருவன் வந்து நான் இன்னவன் எவன் வெல்வான் என்றாலும், வந்தவன் சூனியப் பட்சத்தில் இருந்து சொன்னால்
முன் சொல்லப்பட்ட பெயரை உடையவன் தோல்வி அடைவான்.
அப்பொழுது சரம் பார்ப்பவனுக்குச் சுழிமுனை நடந்தால் அவ்விருவரும் ஒருமித்துப்போவார்கள்.
இவையல்லாமல் சண்டை வாது, வழக்கு நடக்கின்றவனுக்கு அப்போது சூரியகலையாக இருந்தால்
வெற்றி அடைவான். சந்திரனாக இருந்தால் வெல்வான்.
சந்திரகலையில் இருந்தால் தோற்றுப் போவான். சுழிமுனையாக இருந்தால் ஒருமித்துப் போவார்கள். அப்படிச் சந்திரகலையில், சரத்தை உள்ளிழுத்துப் பூரணமாக்கி அச்சரமானது நடக்கும் போது காலை முன் வைத்து ஐந்தடி போய்ப் பின்பு சென்றால் வெற்றியடைவான்.
அடுத்து, சரத்தின் ஸ்பரிசம்:-
“பார்க்கும் கால்இடமெனினும் வலமெனினும் ஒக்கும்
பஞ்சபூதத்து இயக்கம் பகரும்காலை
சாற்றிய தண்டுடன் சேரில் பிரிதிவியாம்
தப்பாமல் பினிக்குத் தாழ்வோடு
மேற்றிசையை நோக்கியெழும் அங்கிவாயு
மெய்யுணர்ந்தோர்
பறத்தோடு மேன்மை குன்றா
நீத்துதையா நாற்றிசையும் சிதறியோட நேடுவான்என்று உரைத்திடுநீ நிலத்து ள்ளோர்க்கே”
இடைகலை, பின்கலை, சுழிமுனை – என்று கூறப்பட்ட இம்மூன்று கலைகளையும் அவற்றின் பயன் அனுபவத்தையும் சோதித்துப் பார்த்தால் ஒத்தேபோகும்.
அந்தந்த நாடிக்குள் பஞ்ச பூதங்கள் நடப்பதுண்டு. அவற்றைத் தேர்ந்து, அறிந்து அனுபவிப்பதே அரிதாகும்.
மூக்கிலிருந்து வரும் சரம் அம்மூக்குத் தண்டைச் சார்ந்து வந்தால் பிரிதிவியின் கூற்றாகும்.
அந்த தண்டிற்கு ‘நேராகிய மற்றொரு புறத்தைச் சார்ந்து வீசினால் வாயுவாகும். இப்படி நான்கு பக்கத்துள் ஒரு பக்கமாக அல்லாமல் அந்நான்கு பக்கமும் கலை நடந்தால் அது ஆகாயத்தின் கூறாக அமையும்.
உலகத்தில் உள்ள அனைவருக்கும் இப்பஞ்சபூதம் இடத்திற்கும், வலத்திற்கும் ஒன்றாகவே வரும்.
சரத்தின் வடிவம், நிறம் மற்றும் ரசக்கியம்:-
“நிலம்பொன் மயிரதநெடுங் கோணநான்கா நீளம்
பன்னிருவிரலா நீர்தான் வெண்மை
இளகுபிறை வடிவுகண்டம் வர்த்திருக்கும் எட்டிரண்டு
விரலொடும் எரிதான் செம்மை
நலங்கொண்ட முக்கோணம் அழற்சிமேலாய் நாலிரண்டு
விரலோடு நளிர் கால்நீ
துலங்கு புலியதுகோணம் ஒருபக்கத்தில் துய்ய
நால்விரலோடும் சொல்லு காலே”
பஞ்ச பூதிய சரம் நடப்பதை எவ்வாறு அறிவதெனில் பிரிதிவி சரம் பொன்மை,
அப்பு சரம் வெண்மை, தேயுச் சரம் செம்மை, வாயு சரம் கருமையாக இருக்கும்.
பொதுக் காண்டத்தில் எவ்வித உணர்ச்சியும் நடக்குமெனில் பிரிதிவிக்குக் கண்டம் தித்திக்கும்.
அப்புவிற்குத் துவர்ப்பும். தேயுவுக்கு உவர்ப்பும் அல்லது அழற்சியையும் உண்டாக்கும். வாயுவுக்குப் புளிப்பும் சுவையாகப் பிரிக்கலாம்.
சரத்தின் வடிவமானது, பிரிதிவி எண்கோணம், அப்பு எட்டுநாள் பிறை போன்று இருக்கும். தேயு முக்கோணம்,
வாயு அறுகோணம், இவைமட்டுமின்றி, சுவாசம் ஓடுகின்ற நிட்சியைக் குறிப்பிடுகையில்
பிரிதிவி 12- அங்குலம்,
அப்பு 16 – அங்குலம்,
தேயு 8- அங்குலம்,
வாயு 4- அங்குலம்
என அறியவேண்டும்…..
இரசமானது தனியே குறிப்பிட்டாலும் முதல் இரசமாகவே வைத்துக் கொள்ளப்படுகிறது. உலகோர்க்குச் சொல்லும்போது பேதங்களாக அறிவது அரிதாகும். ஒரு பூதத்திற்கு நான்கு குறி சொல்லி இருக்கின்றார். ஒன்று இல்லாவிட்டாலும் மற்றொன்றில் தெரியவரும்.
ஒருவன் செய்கருமங்களின் குணங்கள்:-
“சொல்மயவான் வடிவதுதான் வட்டமாகும் துய்யதொரு
விரல்நாசி எல்லாம் சுற்றும்
ஒல்லைநிறம் படிகங்கைப்பிரதம் வாயும்ஓடி வரும்
பூதங்கட்கு உளதோ சொல்க
மல்லநில நீர்க்கும்மிகு பயனாம் செந்தீ
மத்திபமாம் பகர்காலும் வானுந்தீதாம்
பல்வளையாய் சரம்பார்ப்போன் தன்னைப் போற்றி
பாகிலை என்றுஊதி இட்டுப் பணிந்துபாரே”
பார்வதிதேவியிடம் சிவனார் கூறிக்கின்றார்;
அழகான வளையல்களைத் தரித்த கரங்களையுடைய பெண்ணே..! ஆகாய பூதத்தின் நிறம் படிகம். இரச கண்டம் காக்கும். வடிவம் வட்டம்.
நீட்சி ஓர் அங்குலம். பூதங்களின் குணங்களைக் கூறும்போது பிரிதிவிக்கும், அப்புவுக்கும்
உத்தமம். தேயுவிற்கு மத்திமம்,
வாயுவும், ஆகாயமும் தீமை ஆகும்.
சரம் பார்த்துக் குறி சொல்லுகின்றவனுக்குத் தாம்பூலம் முதலானவற்றைக் கொடுத்துப் பணிவிடைகள் செய்து பின் கேட்கவேண்டும். 7, 8 – ஆம் பாடலில் கூறியபடி சூரிய சந்திர கலையில் செய்ய வேண்டிய கருமங்களும், அந்த பாடலை அனுசரிக்க வேண்டிய 48, 49 – ஆம் பாடலைப் பார்த்து அதிலும் சரம் பார்ப்பவருக்குத் தாம்பூலம் கொடுத்துக் கேட்பவனுக்கு நன்மை உண்டாகும் என்ற கருத்து விளக்கப்பட்டுள்ளது.
ஒருவன் பெயரைக் குறித்து வினவ அவனுக்குரிய பலனைக்கூறுதல்:-
“பாராகு முதுகுநீர் காலதாகும் பைந்தழல்மார்ப
வனங்கைப் படர்வான் சென்னி
பேராமல் வினவினபோ துதித்தபூதப் பேர்படைத்த
விடங்களிலே பிழை யில்லாமல்
ஏராகும் பூரணமாம் பக்கந்தன்னில் ஏறிவெட்டும்
தோல்படு தவிசுஇசைத்த எல்லாம்
கூராழி மால்வந்து விலக்கினாலும் குறையாமல்
வடுப்படும் காண் குறிக்கும்காலே..”
இது 19வது பாடல் ஆகும் நீங்கள் தொடர்ந்து இந்த பதிவுகளை படித்தால் தெளிவாக புரிந்துகொள்ளலாம்.
இந்த பாடலின் விளக்கம் என்னவென்றால், முன் 15 – ஆம் பாடலில் கூறியவாறு இருவரைச் சுட்டிக்காட்டாமல் சூனியப் பக்கத்திலும் இருக்காமல், பூரண பக்கத்தில் இருந்தால் சண்டைக்குச் செல்வான்.
ஆயுதத்தால் காயம் உண்டாகும். அதிலும் பிரிதிவி நடந்தால் முதுகில் காயம்படும். அப்புவாகில் காலிலும்,
தேயுவாகில் மார்பிலும், வாயுவானால் கையிலும், ஆகாயமானால் தலையிலும் காயம் ஏற்படும்.
விஷ்ணு தேவனே வந்து விலக்கினாலும் தப்பித்து வரமுடியாது.
அவனுக்குரிய ஆயுதம், போர், போருக்கு நிற்கும் இடம்
“கால்மூலைத் தொடங்கி அழன்மூலை ஏறக்
கயிறுஎனவே கீறிமதி கதிரோனாக
கோல்மேற்கும் தெற்குமதிநிலமாக் கொள்ககொழுங்க
திரோன்கி ழக்குவடக் காகக்கொள்க
சேல்போலு நெடுங்கண்ணாள் புவிக்குக்கத்தி
சேர்ந்தசலம் நாளற்குச் சிலை
காலுக்கு மேற்றண்டாம் வானுக்கு ஆயுதம் கல்லேந்தி விதித்த நிலத்தில் பொருதல் வெற்றியாமே..”
மேற்கூறியதைச் சமனாகப் பாவிக்க, வாயு மூலை தொடங்கி அக்கினி மூலையளவாக ஒரு கயிறு பிடித்தாற்போல் சரியாய்ப் பாவனைச் செய்து அதில் மேற்கு, தெற்கைச் சந்திரன் கூறாகவும், வடக்கு கிழக்கேச் சூரியனின் கூறாகவும் கொண்டு போர் செய்கின்றவனுக்கு அப்போது சூரியகலை இயங்கினால் தானச்சூரியன் திசையில் நின்று எதிரியைச் சந்திரன் திசையில் நிறுத்திச்சமமாகச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் சந்திரனானாலும், சூரியனானாலும் எடுத்து எரியும்.
சேல்மீன் போல் கண்களையுடைய பெண்ணே கேள்..! பிருதிவியாகில் கத்தி, அப்புவாகில் வாள், தேயுவாகில் வில், வாயுவாகில் தண்டு, ஆகாயமாகில் கல் இப்படியாக அதற்குத் தகுந்தாற் போல் ஆயுதங்கள் ஏந்தி விதிப்படி அந்தந்த நிலத்திற்குத் தக்கவாறு சண்டை செய்தால் வெற்றி உண்டாகும்.
நோய்க்குறி:-
———————–
“ஆகியநோய் புருருக்காய புருடவ லங்கேட்கில்
ஆறும்என்க மாதருக்கு மாதறிந்து கேட்கில்
சோகமில முறைதப்பில் பொல்லாதுஎன்க
தொலையாது நாட்சென்று மீளுமென்க
தோகைநில நாட்செலுநீர்கடுகி மீளும்
சுடுதழல் நான்மூன்று தப்பில் துஞ்சப் பண்ணும்
ஏகிடும் காண்நாள்இரண்டின் மிகுந்தால் கொல்லும்
எழில்வான மன்றுதப்பில் இறக்கும்பின்னே..”
ஒருவனுக்கு நோய் ஏற்பட்டபின் அவனே வந்து சரம் பார்க்கின்றவனைக் கண்டு அந்நோய் வருமாவெனக்கேட்டால் அந்நோய் தாவி வருமாம்.
சரம் பார்க்கிறவனுக்கு வலப்பக்கத்தில் நின்று கேட்டால் நிவர்த்தியாகும். பயமில்லை. பெண் கொண்டவன் அவனுக்காக அப்பெண்ணே வந்து கேட்டாலும் குணமாகும். வந்தவள் அவனுக்கு இடப் பக்கத்திலிருந்து கேட்டால் அந்நோயிலிருந்து மீளமாட்டான்.
முன் 13 ஆம் பாடலில் கூறியதைபோல சூனியப் பக்கமாய் இருந்தாலும் உத்தமம்.
ஆணுக்குப் பெண் வந்தாலும், பெண்களுக்கு ஆண் வந்தாலும் ஒருவன் வலப்பக்கத்திலிருந்து குறி கேட்டுக் கொண்டே இடப்பக்கத்திற்கு வந்தாலும் ஒருத்தி இடப்பக்கத்திலிருந்து குறி கேட்டுக் கொண்டே வலப் பக்கத்திற்கு வந்தாலும் நோய் போவது கடினம்.
அப்படிச் சரியாய் வந்து கேட்டாலும் அந்நேரம் பிரிதிவியாகில் கொஞ்ச நாட்களுக்கும், அப்புவாகில் விரைவிலும், அக்கினியாகில் மூன்று நாட்களிலும் குணமாகும், என்றாலும் மிகுந்த துன்பத்திற்கு ஆளாவான்.
வாயுவாகில் அன்றைக்கே நோய் பிரிந்து, பின் மறுநாள் இறப்பான் என்பது உறுதி.
தருணம்:-
—————–
“இறக்கும் உபயந் தனக்குஜந்து நாளில் ஏகின் அக்கால சாவில்லை இதுதான் மெய்யே
பிறகுமொரு பூதலத்தில்ஐந்து பூதம்பிரிந் தோடும் அதுகுரவல் பேசக் கேட்டுச்
சிறப்புடைய பயன்தெரிவது அல்லால் நூலின்
செய்தனால் தேவர்களும் தெரியமாட்டார்
நிறக்குமதிக்கிருந்த ழைத்தால் வந்தது கேட்டால் ர்வெயிலாச் செலசொல்க நினைத்துகேளே.. “
பூதங்களின் இயற்கையாகிய குணங்களுக்கு உரியவை என எண்ணக் கூடாது. அதாவது 10ஆம் பாடலில் கூறியவாறு சுழிமுனை நடக்கில் ஆகும் என்பதும் ஆகாது. ஆகாது என்பதும் ஆகும் என்பது போல ஒருவன் நோயின் குறியைக் கேட்கும்போது, சுழிமுனை நடந்தால் அந்நோய் ஐந்து தினங்களுக்குள் மரிக்கும்.
அப்படி மரிக்காமல் தப்பினால் அவன் இனி ஒரு விபத்துக்கும் அஞ்ச வேண்டியதில்லை. இதனை 14 ஆம் பாடலில் கூறிய படி ஒரு பக்கமாகச் சரம் நடந்தால் ஐந்து வகைப்பட்ட பூதங்களும் அப்பூதங்களுக்குள் ஐந்தும் பிரிந்து நடப்பதுண்டு.
அவை, பிரிதிவியில் பிரிதிவி, பிரிதிவியில் அப்பு, பிரிதிவியில் தேயு, பிரிதிவியில் வாயு, பிரிதிவியில் ஆகாயம் இவ்வாறு அமைந்தால் குருவின் துணைக் கொண்டே அறிதல்
நலமாகும். சரம் பார்ப்பவரை ஒருவர் அழைத்தால் சூரியகலை இயங்கும் போதே போகவேண்டும்.
பேசுவதானாலும் குறி சொல்வதானாலும் சூரியன் இயங்கும் போதே சொல்ல வேண்டும். மற்றபடி கூறக் கூடாது. மிஞ்சி நடந்தால் மத்திமப்
பலனே அடையும்.
பூதச் சரங்களின் இயல்பு:-
————————————————
“கேளிதனை நிலத்திற்கு நீரிற்கும் குணமாம்
கெற்பமெனில் ஆணாகும் கிளர்ந்தொருவன் வினவின்
நாளின் மிலாபங்கள் சாந்தி போக்கு
நன்றாகும் அங்கிதனில் அங்கம் வெல்லும்
வாளமரில் பொல்லாது கெற்பம்கேடாம்
வாயுஎனில் பெண்ணாகும் மற்போர் தோற்கும்
நீள்விசும்பில் அனுவித்தை யோகம்தானு
நீடுமித கெற்பமெனில் வலிவாய் வீயும்”
பெண்ணே….!
கருத்துற்றுக் கேட்பாயாக…. பாடல் 16 இல் சொல்லியபடி பூதச் சரங்கள் இயல்பாகப் பிரிதிவியும் அப்புவும்
நன்மையாகும். 33 ஆம் பாடலில் சொல்லியபடி ஐந்து நாழிகை மிஞ்சி இவ்விரண்டு பூதங்கள் அதிகமாக நடந்தால் இலாபமுண்டு.
14, 18 இல் சொல்லியபடி ஒரு பிராணியைக் கைப் பற்றினாலும் அதன் பேரில் அதிகம் பற்றில்லாமல் தனியே நின்று சூனியத்திலும் இல்லாமல் பூர்ணத்தில் நின்று கர்ப்பக் குறிக் கேட்டால் அப்போது சரம் பிரிதிவியாவது அப்புவாவது நடந்தால் ஆண்பிள்ளை பிறக்கும்.
6 இல் சொல்லியவாறு அமைதி காத்தல்,
போக்குக் காட்டுதல் செய்ய வேண்டியபோது அங்ஙனம் சொல்லி நடக்கும்போது செய்தால் அச்செயல் பலிக்கும்.
தேயு முதல் நடக்கும்போது போர் செய்தால் வெற்றி பெறுவான். அப்போரில் வாளெடுத்தால் மத்திமம்.
அப்போது கர்ப்பக் குறியைக் கேட்டால் அது அழிந்து போகும். வாயு நடக்கையில் கர்ப்பக்குறி கேட்டால் பெண்ணாகப் பிறக்கும்.
காமப்போரில் தோல்வி அடைவான்.
ஆகாயத்தில் வில் போர் வெற்றியடையும். இப்போரில் 10, 18, 20 ஆகிய பாடல்களில் சொல்லியபடி யோகம் புரிந்தால் நன்மையாகும்.
இச்சமயத்தில் கற்பம் கேட்டால் குழந்தை அலியாகப் பிறக்கும். திவார நட்சத்திரக்காலப்பலன் முன் கூறிய
4 ஆம் பாடலில், பின் வரும் 35 ஆம் கவியில் கூறியபடி பிரதானக் காலத்தில் சரம் பார்க்க வேண்டிய சமயத்திலும் நன்மையாகப் பார்க்கவேண்டியது
திதி என்றும் கூறுவர்.
“வீயாத பிரதமைமுதல் விளங்கும் பக்கம் விரவிவரும் முப்பதிலுமும்மூன் றாக
மாயாது வரும் கோமன் இடமதாக
வருகின்ற அருக்கனுக்கும் வலம் அதாகச்
சாயாது புதன் வெள்ளி திங்கள் மூன்றும்
தப்பாது சந்திரனும் சாற்றும்காலை
தேயாது கதிர்செவ்வாய் சனிவியாழன் செங்
கதிரோன் தினமென்று தேறுநீயே..”
முன் கூறிய 4 ஆம் பாடலில், பின் கூறும் 35 ஆம் பாடலில் கூறியபடி பிரதானக் காலத்தில் சரம் பார்க்கவேண்டிய சமயத்திலும் சிறப்பாகக் கூறுவது என்றால் பொழுது விடிய 5 நாழிகை இருக்கும் போது எழுந்து சரம் பார்க்கும் பொழுது வளர்பிறை பிரதமைக்கும் துவிதிகைக்கும் திரிதிகைக்கும் சந்திரகலை தொடங்கி நடக்க வேண்டும்.
அப்படி முன் நான்கு பன்னிரண்டு போக தேய்பிறையில் பிரதமைக்கும் துவிதிகைக்கும், திரிதிகைக்கும் சூரியகலை தொடங்கி நடக்க
வேண்டும்.
பொழுது விடிய 5 நாழிகை இருக்கும்போதே உதித்த சரம் மற்ற 5 நாழிகையும் கலக்காமல் ஓட வேண்டும். திதி யோக வாரங்களில் நிகழ வேண்டியது எனில் ஞாயிறு, செவ்வாய்,
வியாழன், சனிக்கும் சூரியகலை உதிக்க வேண்டும்.
திங்கள், புதன், வெள்ளிக்குச்சந்திரகலை நடக்க வேண்டும். இப்படி நடக்கும் சரமானது எந்தப் பூதத்தில் தொடங்க
வேண்டியது என்றால், 45ஆவது பாடலில் கூறியபடி பூதங்கள் அனைத்து நட்சத்திரங்களுக்கும், வாரங்களுக்கும் உரிய காலசரங்கள் சரியாக இடம் பெற்றால் கெடுதல் இல்லை. எனினும் 33 ஆம் பாடலைப் பார்க்கவும்.
“போக்கரிய புகழ்பிழைக்கில் ஊர் விட்டுஏகல் பொருந்தியதோர் மெய்ந்நோதல் புணர்தோர் சாதல்
ஆக்கமதில் இடர்ஆம் முன்கக்கம் தன்னில்
ஆரும் கலகம் இரண்டாகில் அர்த்தநாசம்
நீக்கமலர் கிளைஞர்க்கே உறு நோயுண்டாம்
நீள்நோயும் அன்னவரை வாட்டி நிற்கும்
தேக்கிய ஐந்தில் தேச மலையும் ஆறில்
செகத்தரசர் தேடும்ஏழில் சேரும்நூவே..”
வெள்ளி தப்பினால் தான் வசிக்கும் மனைவியை விட்டுப் பிரிந்து வாழவேண்டியது வரும். இந்த எல்லையை விட்டு மற்றொரு எல்லைக்குச்செல்ல வேண்டியது வரும்.
தேகம் மெலியும். தன்மனைவிக்குச் சாவு வரும். சாவு என்பதில் மனைவியுடன் சண்டை, பிணக்கு, நோய் முதலிய வருந்தக் கூடிய அளவிற்கு இத்திசையில் நடக்கும்.
புணர்ந்தோர் சாதலென்றும் சாவு முடிவு வரைக்கும் வருத்தம் வரும் என்று துணிந்து கூறுவதென்றால் நன்மையெனவும் பொருள் கொள்ளலாம். அதாவது தேவராக அட்டமாசித்தி மட்டும் பெருக்கம் உண்டாக்கும் என்ற கருத்தில் கொண்டு கூறியுள்ளார் எனலாம்.
மற்றவற்றில் சொல்லியபடி ஊருக்கும், மன்னனுக்கும், அதிகாரிக்கும் வரும்.
இதுவுமல்லாமல் வளர்பிறை காலத்தில் பிரதமை தப்பினால் ஏதாவதொரு தொல்லை வந்து சேரும். துவிதிகை,
கலகம் திரிதிகை, பொருட்சேதம் – சதுர்த்தி ஆகிய காலங்களில் போக்கு உண்டாகும். சகலவித துன்பங்களாக
பஞ்சமி – பந்துகளுக்கு வியாதி, சஷ்டி – அத்தேசத்தார்க்கும் அரசனுக்கும் வருத்தம், சப்தமி – தேசத்தார்க்கும் அரசனுக்கும் மட்டுமே தொல்லையென எண்ணி இருத்தல் கூடாது.
தன்னாலே அவர்களுக்கு வருத்தம் வந்ததென்று அவதூறான, பொய்யான பேச்சுகளைக் கேட்டு வருத்தப்பட வைக்கும் என்று அறிதல் வேண்டும்.
திதி பிழைக்கில் சந்திர சூரியன் இயல்பு:-
“நோவுடனே சாவுமாம் எட்டாகின்மற்றை
நுவலாதபக்கமும் இம்முறையே கொள்க
தாவில்வெங் கதிரோனின் மதியமுண்டாம்
சந்திரனுள் வெங்கதிரும் தப்பாது உண்டாம்
gait இவர்களையே உணரும்போதில் உற்றசரங் குருமுகத்தால் உணர்ந்து கொள்க தேவர்பிரான் உரைத்தருள உமையாள் கேட்டச்
செவ்விஇதன் முறைமைதனைத் தெளிந்துதேறே”
அஷ்டமி பிழைக்கில் நோயுடன் சாவும் வரும். வளர்ப்பிறை, தேய்பிறை இவற்றிற்கும் இதனையே கூறுவர்.
சூரியனுக்குள் சந்திரனும், சந்திரனுக்குள் சூரியனும்
ஒன்றுக்குள் ஒன்று கலந்து தோன்றுவதும் உண்டு.
உமையவளே…!
தன் சுயவல்லமையினால் தெரிந்து கொள்ள இயலாதவர்கள் சங்கரன் அருளினாலே தெரிந்து கொள்வர்.
இந்நூலைத் தாமே அறிந்து கொண்டாலும், குருவின்
அருளினால் அறிந்து கொள்வதே சிறப்பாகவும், தெளிவாகவும்
அறிந்து கொள்ள முடியும்.
இடர் வந்தாலும் உபசாந்தம் :-
—————————————————–
“தெளிகதிர்சேய் மூன்றடியாம் தெற்கு பந்தன் செம்பொன் மூன்றடிமேற்குத் திங்கள்வெள்ளி
இளகிய நாலடிவடக்குப் புந்திமுன்போல் இரட்டையலும் கிழக்கிரவி யெழுதன் முன்னே
வளமுடனே பூரணபக்க த்தில்சென்று
வந்திருந்து நமைநினைந்து வழுத்தல் செய்தே உளமகிழ்ந்து போகிலெல்லாம் பலிக்கும் துன்பம்
உண்டாகா இவையனைத்தும் உணர்ந்துதேறே”
மேற்சொல்லியபடி கால சரஞ்சரிப்பட்டு வருமானால் வராது. ஊழ்வினையின் படியே தான் நடக்கும். அதை நம்முடைய வசமாக்குவதற்கு எளிதாகுமா..? என வருந்த வேண்டியதில்லை.
சரம் பார்ப்பவர் முன் பாடலில் கூறியபடி தருணகாலத்தில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து ஞாயிறு, செவ்வாய்க்கிழமகளில் தென்புறமாய் மூன்றடி முன் 11 ஆம் பாடலில் கூறியபடி சாரத்தைப் பூரணமாக்கிக் காலையிலே முன்னிட்டுக் கொண்டு போகவேண்டும்.
சனி, வியாழக்கிழமைகளில் மூன்றடி மேற்கே போகவேண்டும்.
திங்கள், வெள்ளிக்கிழமைகளில் நாலடி வடக்கே போகவேண்டும். புதன்கிழமைக்கு இரண்டடி கிழக்கே போகவேண்டும். இவ்வாறு போனால் ஒரு திவ்வியமாகிய ஆசனத்திலிருந்து
என்னை நினைத்துத் துதி செய்து,
பின்னெழுந்து எங்குச் சென்றாலும் அல்லது எங்கே இருந்தாலும் துன்பங்கள் எப்பொழுதும் நம்மை அணுகாது.
மேலதில் ஒருவாரத்திற்குச் சரம் தப்பினாலும் ஏழு நாட்களுக்கும் சரிவந்தாலும் நடப்பவை.
“தேறுநீபிவை எல்லாம் எவ்வி தாக
செங்கதிரோன் அன்னாளில் திங்கள் ஓடி
மாறிவரும் கதிரவனும் சோமன் நாளிக
மறிந்தோடி வரும்கிழமை மேழு மாறில்
கூறுபட உடலுயிர் விட்டு ஏகுமென்க
குணமாகும் இக்கிழமை கோணாதோடில்
சீறிவரும் காலனையும் செயிப்பர் மற்றச்
சித்தயோகத்து நிலை சித்தியாமே”
சூரியன் நடக்க வேண்டிய காலத்தில் சந்திரன் நடந்தாலும், சந்திரன் நடக்கும் காலத்தில் சூரியன் நடந்தாலும் இப்படியாக மாறுபட்டு ஒருவார காலம் நடந்தால் இறந்து போவான்.
அப்படியில்லாமல் கிழமை ஏழும் தவறாமல் மேற்கண்ட நாழிகையும் தெளிவோடு திக்கு நோக்கிச்செல்வதுடன் பிராணாயாமம் மாறாமல் நிகழ்ந்து வந்தால் எமனுக்கு அஞ்ச வேண்டியதில்லை. சீவன் நன்றாக வாழ்ந்திருக்கும். அவனுக்கு அஷ்டமாசித்தியும் சித்திக்கும்.
குறி சொன்ன மார்க்கம்:-
———————————————-
“சித்தமுடன் இரேசகத்தில் வந்துகேட்டால்
செப்பிய அப்பொருள்கள் எல்லாம் தீதேயாகும்
உத்தமமாம் பூரகத்தில் வந்துகேட்டால்
உறைத்த பொருள்அத்
தனையும் உண்மையாகும்
மெத்திய சம்பகத்து உரைக்கில் நன்றேயாகும்
வேண்டாரை ரேசகத்தில் விளியப்பார்க்க
வைத்தமலம் வாயுநீர் கழிபோதென்னின்
மாற்றலாதாங் கெடுவர்இதுமாறிலாதே”
சரம் பார்ப்பவர் சுவாசம் செய்யும்போது வந்து கேட்டால் கேட்ட காரியம் நடக்காது. பூரகத்தில் கேட்டால்
நன்மையாகும். அவன் கூறுவதும் உண்மையாகவே இருக்கும். கும்பகம் செய்யும் காலத்தில் கேட்டால் நற்காரியம் சித்தியாகும். மலம், ஜலம், வாயு கழியும் போது கேட்டால் பகைவன் கெட்டுப் போவான். மற்றதை அறிய குரு முகாந்தத்தில் தெரிந்து கொள்ளவேண்டும்.
சனி வியாழன் பலன்:-
—————————————–
“மாறிவரும் பக்கம்குறையும் பக்கமதி நாடிகதிர்
நாடி வளர் பொன்னும் ஓட்டில்
பேறுமிக உண்டாகும் பிராணிளிக்கும் பின்புரைத்த
காரியங்களுக்கு எல்லாம் பேறாம்
கூறுகின்ற சனிநாளில் பகலிரவில் குலவுசரம்
வடமிடத்தில் காணாது ஓடி
நானாமலர்ப் பெருந்திருவே சொன்னோம் இந்தஞாலம்எங்
கும்புகழ் பெறவே நடக் குமென்றே”
வளர்பிறையில் வியாழனுக்குச் சந்திரன். தேய்பிறையில் வியாழனுக்குச் சூரியன். இவை சரியாக இருந்தால் சிறந்த பேறு பெறுவான். சீவன் முத்தனாய்த் தளர்வின்றி வாழ்வான்.
இவையல்லாமல் சனிக்கிழமைக்கு இரவிலும் பகலிலும் சந்திர, சூரிய கலைகளில் சரங்கள் மாறுபாடில்லாமல் நடக்கவேண்டும். அப்படி நடந்தால் இவ்வுலகபெங்கும் மதிக்கத்தக்கப் புகழ்கிடைக்கும்.
“நடப்புடைய ஒருவனெங்கே என்றொருவன் கேட்பதில்நால்
நிலத்தில் அ கத்திருப்ப நன்னீர்முற்றம் அடங்கும்அழும் ஆகில்உள் ளூர்வாயு வேற்றுஊர்
அம்பலமேல்
மலைமேல்தான் துயிலல் ஆம்என்றே அறிக
விடப்போனான் புவிக்குநிலை நீர்க்குமீண் டான்எவ்விய
அழற்குத்தான் வருகின்றான் வெயில்காலுக்கு
மடக்குழலாய் ஊர்வந்தான் வானமாகில் வருவனொரு
நாழிகையின் இதில் கற்றும் மாறிலாளே”
இதன் பொருள் என்னவென்றால்,
ஒருவன் வந்து மற்றொருவனை எங்கே
இருக்கிறான் என்று கேட்டால், அவன் கேட்கும்போது சரம் பிருதிவியாகில் வீட்டிற்குள் இருப்பான். அப்புவாகில் முற்றத்தில் இருப்பான். தேயுவாகில் அக்கிராம எல்லைக்குள் இருப்பான். வாயுவாகில் எல்லைக்கு வெளியில் புறப்பட்டு இருப்பான். ஆகாயமாகில் மலை ஏறுகின்றான் அல்லது உறங்கிக் கொண்டிருக்கிறான் என்று கூறவேண்டும்.
வெளிநாட்டுக்குச் சென்றவரைக் குறித்துக் கேட்டால் பிரதிவி எனில் அவ்வூரில் நிலைத்து இருக்கின்றான்.
அப்புவெனில் திரும்பி வருகின்றான். தேயுவெனில் திரும்பினவன் நில்லாமல் நடந்து வருகின்றான். வாயுவெனில்
அவனிருக்கும் ஊருக்குள் வந்தான். ஆகாயமெனில் ஒரு நாழிகைக்குள் வந்து வீடு சேர்வான் – என்று சொல்ல
வேண்டியதாகும்.
இச்சரத்தில் மனம் வயப்படுதல்:-
————————————————————-
“மாறிவரு வாயுமனோ வலயந்தன் னின்மரிக்க
உயிர்சித்திநிற் வதுதான் நிற்கும் கூறுசமயம் கூற்றால்பயம் இல்லை குறித்து இருமண்
ஒன்றரை நாழிகையாக் கொள்க
தேறுபுனற்கு ஒன்றேகால் வன்னிக்கொன்று சீவன்முக்
கால்வானம் அரைசிறந் தநாடி
பாரும்ஐந்து நாழிகைக்குள் வரில்நற்குன் றில்பழுது படும் உடம்பில் பற்றிப் பாறே”
இதன் பொருள்:-
இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் ஒன்றையொன்று மாறிமாறி நடக்கும். இச்சரமானது தேகத்திலேயே அடைபட்டுப் போகுமானால் பிராணனுக்கு அழிவில்லை. அப்படி அடைபட்டு நின்றால் மனம் மற்றகரணங்களுக்கும் வேலையில்லாமல் அசைவற்று நிற்கும்.
மற்ற சமயங்களிலும் பயமில்லை. எமனுக்கும் பயப்படத் தேவையில்லை.
முன் கூறியது போல் இடப்பக்கமும் வலப்பக்கமும் மாறியோடும் சரம், ஒவ்வொரு பக்கத்திலும் எந்நேரமும் தரித்து நடக்குமெனில் ஐந்து நாழிகையாகும். அதிலும் பூதங்களுக்கு ஏற்றவாறு பிரிப்பதெனில் மண்ணில் ஒன்றரை நாழிகையும், நீரில் ஒன்றேகால் நாழிகையும், நெருப்பில் ஒரு நாழிகையும், காற்றில் முக்கால் நாழிகையும், வெளியில் அரை நாழிகையும் ஆக நிறைந்தோடும்.
இப்படியாகப் பூதங்கள் வகைப்படுத்தி ஐந்து நாழிகைகளும் ஒவ்வொரு பக்கத்திற்குச் சரியாகச் சிதையாமல்
ஓடவேண்டும். இதைவிடக் குறைந்தாலும், வளர்ந்தாலும் தேகமானது நலிவடையும். இச்சரம் வசப்பட வழி தேட வேண்டும். அவ்வாறு தேடாதபோது முன்கண்ட பயம் உண்டாகும். இல்லை என்றால் ஐந்து நாழிகையும் பூதங்களின் அளவைச் சிதறாமல் நடக்கவேண்டும். இல்லையெனில் உடலானது நலிவடையச் செய்யும்.
தத்தமது வாழ்நாள் பிரமாணம் அறிதல்:-
—————————————————————————-
“பற்றினான் சொன்னபடி அயன்முல் னாள் பகலொரு
போது உண்டு பரிசுத்தன் ஆகி
மற்றைநால் உத்தமமாம் அயனந்தன் னின்மாறி
இடந்தனிலே ஒடும் வலந்தான்
தெற்காகும் நாழிகைதான் ஐந்து நூறாம் பெருங்கடிகை தனில்குறையும்பிராண நாச
முற்றொரு மாநாழிகைக்கோ ஆண்டுதாமு
முறையேநான்
சொன்னகணக்கு உண்மைதான்”
இதன் பொருள்:-
சரம் பார்ப்பவருக்குச் சென்ற நாட்கள் போக மற்றும் நின்ற நாட்கள் எவ்வளவு…? என்று தெளிவு பெற
வேண்டும்.
அதெப்படியெனில் அயனசரமாம் பார்ப்பது என்றால் தை மாதம் முதல் தேதியில் தக்ஷண காலமாகும். இவ் அயனகாலத்தில் முன்னாள் பகலில் ஒரு பொழுது அன்னமுண்டு தத்துவங்களைச் சுத்தமாக்கினால், தேகமானது மெலிந்து மனத்துக்கும் மற்ற வாயு அதிபதி கரணங்களுக்கும் வருகின்ற இடையூறு தவிர்க்கப்படும்.
நிருவிதை (சித்திரை) மாதம் முதல் தேதியில் பொழுது விடிய 5நாழிகை இருக்கும்போது சரம் பார்த்தால் வாரம், திதி, நட்சத்திரங்களைத் தள்ளி இடப்பக்கத்தில் உதித்து முன்னே கூறியவாறு ஐந்து நாழிகைக்குள் சிதறாமல் ஒடும்.
ஆடி மாதம் முதல் தேதியில் சரம் வலப்பக்கத்தில் ஓடும். சரம் ஐந்து நாழிகைக்குள் சிதறாமல் இருந்தால் முன்கூறியபடி சரம் பார்ப்பவர் தான் செய்யும் பிராணாயாம உதவியினால் அன்று முதல் வருகின்ற நூறு வருட காலத்திற்கும் வாழ்வார்.
இதுவன்றி குறைந்தால் அவ்வைந்து நாழிகையை நூற்றொரு மாதமாகவும்,
ஐந்தை நூறாக்கிக் குறைந்த நாழிகைக்கு ஒரு மாவோ, இரண்டு மாவோ அல்லது தன்மேல் கைபட்டவையோ அதற்கு ஒவ்வொரு
மா நாழிகையைக் கணக்காக்கிக் கொள்ள வேண்டும்.
முழுவதுமே தப்பிச் சரம் இடத்திற்கு வலமாவும், வலத்திற்கு இடமாகவும் ஓடினால் அவனுக்கு மரணகாலம் என்று
அறிதல் வேண்டும்.