பிருத்வி முத்திரை (மண் முத்திரை)

பிருத்வி முத்திரை (மண் முத்திரை) என்பது உடலில் பூமி தத்துவத்தை (Earth Element) சமநிலைப்படுத்தும் ஒரு சக்தி வாய்ந்த யோக முத்திரையாகும். இது நம் உடலிலும் மனதிலும் நிலைத்தன்மை, சக்தி, மற்றும் அமைதியை ஏற்படுத்துகிறது.

இந்த முத்திரையை தினமும் செய்யும் பழக்கம் நினைவாற்றலை (Memory Power) மற்றும் கவனத்தை (Concentration) அதிகரிக்க உதவுகிறது. இது மூளைக்கு தேவையான ஊட்டச்சத்தையும் ஆற்றலையும் வழங்கி மன அழுத்தம் (Stress) மற்றும் குழப்ப நிலையை குறைக்கிறது.

பிருத்வி முத்திரை மனத் தெளிவை (Mental Clarity) மேம்படுத்தி, தன்னம்பிக்கையை வளர்க்கும். இது நீண்ட நேரம் படிப்பவர்களுக்கு, தியானம் செய்யும்வர்களுக்கும், மற்றும் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் நபர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

— சுலபமாக அமர்ந்திருங்கள் (Padmasana அல்லது Sukhasana).
— கைகளை மடியில் வையுங்கள், கரங்கள் மேல்நோக்கி இருக்கட்டும்.
— முதுவிரலும் மோதிர விரலும் (Thumb & Ring finger) நுனிகளை ஒன்றாக இணைக்கவும்.
— மற்ற விரல்கள் நேராக நீட்டியவாறு வைத்திருங்கள்.
— தினமும் 20–30 நிமிடங்கள் வரை செய்யலாம்.

நன்மைகள் (Benefits):

  • நினைவாற்றல் மற்றும் கவனம் மேம்படும்
  • மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும்
  • தன்னம்பிக்கை மற்றும் மன அமைதி அதிகரிக்கும்
  • உடல் சக்தி மற்றும் நிலைத்தன்மை கிடைக்கும்
  • தோல் மற்றும் முடி ஆரோக்கியம் மேம்படும்

முன்னெச்சரிக்கை:
மிக அதிக சோர்வு அல்லது மந்த நிலை இருந்தால் இந்த முத்திரையை குறைந்த நேரம் மட்டுமே செய்யவும்.

நமது கைகளின் விரல்கள் பஞ்சபூதங்களுடன் (பிருத்தி, அப்பு, (தேயு)தீ, வாயு, ஆகாயம்) நேரடியாக இணைந்துள்ளன. ஒவ்வொரு விரலும் ஒரு பூதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. முத்திரை மருத்துவம் மூலம் இப்பஞ்சபூதங்களை சமநிலையில் வைத்தால் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றில் ஆரோக்கியம் மற்றும் அமைதி நிலை பெறலாம்.

📞 Online Consultation: 99434 76587 (WhatsApp) 🎓 Interested in the Muthirai Maruthuvam Online Course? Contact us on WhatsApp! 👍 Please Like, Share, and Subscribe for more updates!

Want to say something? Post a comment

Your email address will not be published. Required fields are marked *

loader