முத்திரை பயிற்சியின் அற்புதங்களும் சித்தர்களின் ரகசியங்களும் | Mudra Therapy in Tamil

முத்திரை மருத்துவம்! பஞ்சபூத ஆதார சக்கரங்களை இயக்கும் முத்திரைகள்! உடல் மனநல காக்கும் முத்திரைகள்

முத்திரை என்ற ஒரு மகத்துவமான விஷயத்தை நாம் செய்வதன் மூலம், நமது தேகத்தில் ஆரோக்கிய தன்மையையும் பிரபஞ்சத்திலிருந்து கிடைக்கக்கூடிய ஆற்றலை உள்வாங்கி நம் வாழ்வை நல்முனைப்படுத்தக்கூடிய அதிசயமான சக்தி வாய்ந்த முறையை சித்தர்கள் நமக்குக் கொடுத்துள்ளனர். சித்தர்களின் வழியில் வந்த முத்திரை பயிற்சியை ‘முத்திரை வைத்தியம்’ என்றும், வழிபாட்டிற்கு ‘முத்திரை வழிபாடு’ என்றும் முன்னோர்கள் கூறுகிறார்கள்.

நம் முன்னோர்கள் கோவில் விக்கிரகங்களில் இருந்தும் எல்லாவற்றிலும் முத்திரைகளைத் தெரிந்து கொள்ளும் வகையில் செதுக்கி வைத்துள்ளனர். நம்முடைய விரல்களில் இருக்கக்கூடிய பஞ்சபூத சக்திகளும், ஆதார சக்கரங்களும், கோள்களின் தன்மைகளும் தெரியத் தெரிய, அவற்றை முறையாகப் பயிற்சி மூலமாக எடுத்துச் செல்லும் போது என்ன நடக்கிறது என்பதை உணர்வுபூர்வமாகத் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் இருந்தபடியே நமக்கு வாய்ப்பளிக்கும் இடத்தில் அமர்ந்து முத்திரைகளைப் பிடிக்கின்ற பொழுது, சக்தி நிலைப்பாடு அதிகமாக நமக்குள்ளே வேலை செய்து நம்மை ஒரு உயர்ந்த ஸ்தானத்திற்கு அழைத்துச் செல்லும். உங்களுக்கான முத்திரை பயிற்சிகளை வழங்குவதற்காகவே இந்தச் சேனல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சேனலைப் பார்த்தே நீங்கள் பயிற்சி பெறலாம் அல்லது இன்னும் தெளிவான ஆன்லைன் வகுப்புகள் மூலமாகத் தொடர்ந்து என்னிடம் கற்றுக்கொள்ள விரும்பினால், அதற்குரிய WhatsApp எண் டிஸ்கிரிப்ஷனில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தொடர்பு கொண்டு அதற்கான விவரங்களையும் கட்டணங்களையும் தெரிந்து கொண்டு கத்துக்கொள்ள முடியும்.

முத்திரையை மனிதன் முழுக்க முழுக்க உணர்ந்து செய்ய வேண்டும் என்பதற்காகவே இது கொண்டுவரப்பட்டுள்ளது. பயிற்சி செய்யச் செய்ய முத்திரைகளின் அதிசயத்தை உங்களால் சூப்பரா புரிந்துகொள்ள முடியும். முத்திரைகள் எப்படி வேலை செய்கின்றன, அதற்கான காரணங்கள் என்ன, உடல் எப்படி வேலை செய்கிறது, இதன் மூலமாக எந்த அளவுக்கு நோய் தன்மையிலிருந்து விடுதலை பெற முடியும் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் முத்திரை பிடிக்கும் போது எந்தவிதமான பக்க விளைவுகளும் கிடையாது. ஆனால், எந்த முத்திரையை எப்போது செய்ய வேண்டும், எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்ற கால அளவு உள்ளது. முன்னோர்கள் ஆராய்ச்சி செய்த விஷயங்களை நான் படித்த ஏடுகளிலிருந்தும், எனக்குக் கற்றுக்கொடுத்த குருமார்களிடமிருந்தும் தெரிந்துகொண்டேன். இதற்கு அனைத்து குருமார்களுக்கும், நண்பன் ராஜேஷுக்கும், நான் படித்த புத்தகங்களின் குருமார்கள் அத்தனை பேருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து சேனலை ஃபாலோ பண்ணுங்கள். வீடியோ பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள், கமெண்ட்ஸ் செய்யுங்கள், சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். 9943476587

குருவே நம, தந்தையே நம. நாம இன்னொரு பதிவுல சந்திப்போம்.

Want to say something? Post a comment

Your email address will not be published. Required fields are marked *

loader