உள்ளங்கைகளடங்கிய கோள்கள்! முத்திரைகள் மூலம் இணையும் பிரபஞ்ச சக்திகள் | Planets Hidden in Your Palms!

கை விரல்களும் கோள்களும்: முத்திரை பிடிக்கும் போது நமது கைகளில் உள்ள கோள்களின் தன்மையால் சக்தி நிலைப்பாடு அதிகரிக்கிறது. கைகளுக்குள்ளேயே 9 விதமான கோள்களின் இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன.

உள்ளங்கையில் கோள்களின் அமைவிடங்கள்:

  1. சுக்கிர மேடு: கட்டைவிரலின் அடிப்பகுதி.
  2. சந்திர மேடு: உள்ளங்கையின் ஓரமாக உள்ள பகுதி.
  3. செவ்வாய் மேடு: பள்ளமான பகுதியிலிருந்து மேடு வரை உள் செவ்வாய், நடு செவ்வாய், வெளி செவ்வாய் எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
    4.குரு மேடு: ஆள்காட்டி விரலுக்குக் கீழே உள்ள சிறிய மேடு.
  4. சனி மேடு: நடுவிரலுக்குக் கீழே உள்ள பகுதி.
  5. சூரிய மேடு: மோதிர விரலுக்குக் கீழே உள்ள பகுதி.
  6. புத மேடு: சுண்டு விரலுக்குக் கீழே உள்ள பகுதி.

கோள்களின் இயக்கம்: கேலக்ஸியில் உள்ள பல கோள்களில் 2 கோள்கள் நில கிரகங்களாக வைக்கப்பட்டு, ஏழு இயங்கக்கூடிய கோள்கள் மூலம் உடல் இயக்கம் மற்றும் ஏழு ஆதாரங்களுடன் தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்து முன்னோர்கள் உள்ளங்கையில் நிரூபித்துள்ளனர்.

உள்ளங்கைகளடங்கிய கோள்கள்! முத்திரைகள் மூலம் இணையும் கோள்கள்! விரல்களில் அடங்கிய பிரபஞ்ச ரகசியம்! Mudra Secrets

உள்ளங்கைகளுக்குள் அடங்கியிருக்கும் இரகசியத்தில் பல விசயங்களை நம் முன்னோர்கள் வெளிப்படித்தினார்கள். அப்படி நமது கைளுக்குள்ளேயும் விரல்களிலும் விளையாடும் 7 ஆதாரங்களுக்கான 7 கோள்கள் பற்றிய இருப்பிடத்தை இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். முன்னோர்கள் எவ்வளவு ஞானம் உடையவர்களாக இருந்துள்ளார்கள்.

கடும் தவம் செய்து தன்னை உணர்ந்து பிரபஞ்ச இரகசியத்தில் தன்னுள் இயங்கும் பிரபஞ்ச இரகசியத்தை உடலுக்குள் கண்டுணர்ந்து வெளிப்படித்தினார்கள். அப்படி நமக்காக அவர்கள் கொடுத்து சென்ற சக்தி வாய்ந்த விசயங்கள் நிறைய நிறைய வழிந்து ஓடும் உணர்வு உடைய உடம்பினை இறைவன் கொடுத்துள்ளார் என்று சித்தர்கள் ஞானிகள் யோகிகள் ரிஷிகள் இன்னும் நமக்குத் கேள்விப்படாத பல அற்புதமான தெய்வீக வடிவங்கள் நமக்கு கொடுத்து சென்ற பொக்கிஷம் தான் ஆன்மீகம்.

அப்படிப்பட்ட ஆன்மீக வெளிப்பாட்டில் நமது உள்ளங்கையில் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன்(குரு) வெள்ளி(சுக்கிரன்) சனி இவைகளை சக்திகளை நமது உள்ளங்கை மூலம் கிரககிக்க முடியும். அந்த அற்புதமான சக்தியை இந்த வீடியோ பார்க்கும் அனைவரும் அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

Want to say something? Post a comment

Your email address will not be published. Required fields are marked *

loader